அப்படியே விக்கித்து போன மக்கள்.. தருண் கோகாயின் "கடைசி ஆசை" என்ன தெரியுமா.. நிறைவேற்றும் அசாம் அரசு!
தருண் கோகாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற அசாம் அரசு முடிவு செய்துள்ளது
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தருண் கோகாய் என்ற தூண் சரிந்துவிட்டது.. இதையடுத்து அவரது கடைசி ஆசையை குடும்பத்தினர் நிறைவேற்றும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
அசாம் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான தருண் கோகாய், கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்... அதிலிருந்து அவர் மீண்டுவிட்டாலும், மறுபடியும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.

அதனாலல் அவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. எவ்வளவோ முயற்சி செய்தும், டாக்டர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை..அவரது இழப்பினால் காங்கிரஸ் கட்சி அதிர்ந்து பேயுள்ளது.
அசாம் மாநிலம் மட்டுமின்றி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலும் முக்கிய பதவிகளை வகித்தவர்.. அதுமட்டுமல்ல, அசாம் மக்களுக்கு தருண் கோகாய் என்றாலே தனிப்பட்ட பிரியம் உண்டு.. இதற்கு காரணம் 2001 முதல் 2016ம் வருஷம் வரை அந்த மாநிலத்தில் 15 வருஷங்கள் முதல்வராக இருந்தவர்.
உயிரிழந்த தருண் கோகாயின் உடலை 3 நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொருட்டு அனைத்து ஏற்பாடுகளும் நடந்துள்ளன.. பிறகு அசாம் மாநில தலைமை செயலகத்துக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்படும்...அங்கிருந்து காங்கிரஸ் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
பொது மக்கள் பார்வைக்கும் அவரது உடலை ஒரு நாள் வைக்க வேண்டும் என்று அவரது மனைவி வேண்டுகோள் விடுக்கவும், அதற்கு அரசு இசைந்துள்ளது.. இறுதியில், 26ம் தேதி அவரது இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டு, கவுகாத்தியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இடைப்பட்ட நாளில், தருண் கோகாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன.. தன் உடலை நல்லடக்கம் செய்யப்படும் முன்பு, இந்து கோயில், சர்ச், மசூதிக்கு எடுத்து செல்லப்பட வேண்டும் என்று தருண் ஆசைப்பட்டாராம்.. அதன்படியே, உடல் இந்து கோயில், சர்ச், மசூதி உள்ளிட்டவற்றுக்கு எடுத்து செல்லப்படும் என்று அசாம் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ரிபுன் போரா தெரிவித்துள்ளார்.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications