காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையின் 5 முக்கிய அம்சங்கள் இவைதான்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

Congress Manifesto: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு- வீடியோ
டெல்லி: காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 முக்கிய அம்சங்கள் ஆதாரமாக கொள்ளப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அப்போது பேசிய அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி, 5 முக்கிய அம்சங்களை ஆதாரமாக கொண்டு இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அந்த 5 அம்சங்கள் இவைதான்:
- நியாய் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள ஏழை மக்களுக்கு வருடத்திற்கு குறைந்தபட்சமாக ரூ.72,000 வழங்கப்படும்.
- அரசுப் பணிகளில் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். பஞ்சாயத்துகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு உருவாக்கப்படும். புதிதாக தொழில் தொடங்குவோர் முதல் 3 வருடங்களுக்கு எந்தவிதமான அனுமதியும் பெற வேண்டியதில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 150 நாட்களாக வேலை நாட்கள் உயர்த்தப்படும்.
- விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடனை திரும்ப செலுத்தாத விவசாயிகள் கிரிமினல் குற்றவாளிகளாக பார்க்கப்பட மாட்டார்கள். சிவில் குற்றமாக மட்டுமே பார்க்கப்படும்.
- கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% நிதி ஒதுக்கப்படும். தனியார் காப்பீட்டு நிறுவனங்களை தவிர்த்து, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் பலப்படுத்தப்படும்.
- தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கு கூடுதல் அக்கறை செலுத்தப்படும்.
இவைதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் அடிப்படையான 5 அம்சங்களாகும்.
More From
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications