மோடியின் வேலையே இதான்.. மக்களிடம் கொள்ளை! கூலிகள் தற்கொலை.. செல்வந்தர்களான நண்பர்கள் - ராகுல் சுளீர்
டெல்லி: சாதாரண மக்களிடம் கொள்ளையடித்து நண்பர்களை பணக்காரர்களாக்குவதே பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே வேலை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி, கடந்த சில ஆண்டுகளாக இமாலய வளர்ச்சியை அடைந்து இருக்கிறார். துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைதொடர்பு என பல துறைகளில் கால்பதித்து வருகிறது அதானி குழுமம்.
இப்படி தொடர்ந்து தொழில் வளர்ச்சியில் ஏற்றம்கண்டு வரும் அதானி, கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த முகேஷ் அம்பானியை முறியடித்தார்.

உலக பணக்காரர்கள் பட்டியல்
இதனை தொடர்ந்து முன்னேறிய அதானி ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தார். உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 10 வது இடத்தில் இருந்த அதானி படிப்படியாக முன்னேறி கடந்த ஜூலை மாதம் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி 4 வது இடத்துக்கு முன்னேறினார்.

3 வது இடம்
இந்த நிலையில் அதானியின் சொத்து மதிப்பு 137.4 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து வந்த பெர்னார்ட் அர்னால்டை பின்னுக்கு தள்ளி கவுதம் அதானி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் டெஸ்லா அதிபர் எலான் மஸ்கும், 2 வது இடத்தில் அமேசான் அதிபர் ஜெஃப் பெசோசும் உள்ளனர்.

ரெட் அலர்ட்
இந்த நிலையில் கடன் சுமை, கடன் நிலுவைத் தொகைகள், அரசு, சமூக ரீதியான காரணங்கள், அதானி குழுமத்தில் விரிவாக்க பணிகள் போன்றவற்றால் அந்த நிறுவனத்துக்கு அபாயம் ஏற்படலாம் என்று கடன் ஆராய்ச்சி நிறுவனம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. அதானி குழுமம் தொழில்களுக்கு வங்கிகளிடம் அதிகளவில் கடன் வாங்கியே முதலீடு செய்வதாகவும் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என்று கணித்தது.

ராகுல் காந்தி டுவீட்
ஒரு மணி நேரத்திற்கு 5 தினக்கூலிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பிரதமரின் மிகவும் பிரியமான நண்பர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ₹85 கோடி சொத்து சேர்க்கிறார். பிரதமர் சாதாரண மக்களிடம் இருந்து கொள்ளை அடித்து தன் நண்பர்களை பணக்காரர் ஆக்கும் வேலையை மட்டும் தான் செய்கிறார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications