விபத்தில் சிக்கிய ஸ்கூட்டர்! பதறிப்போய் காரில் இருந்து இறங்கி ஓடிய ராகுல்! டெல்லியில் நெகிழ்ச்சி
டெல்லி: டெல்லியில் நடுரோட்டில் விபத்தில் ஸ்கூட்டர் விபத்தில் சிக்கிய நபரை பார்த்ததுடன் ராகுல் காந்தி தனது காரை நிறுத்தி வேகமாக ஓடிச்சென்று செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீதான 2வது நாள் விவாதம் இன்று நடந்தது.

இந்த விவாதத்தில் பங்கேற்க ராகுல் காந்தி இன்று காலை தனது தாய் சோனியா காந்தியின் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். வீட்டில் இருந்து கார் வெளியே வந்தது.
அப்போது வீட்டின் அருகே உள்ள சாலையின் நடுப்பகுதியில் 2 கார்கள் நின்றன. கார்களின் முன்பு சாலையில் ஸ்கூட்டர் விழுந்து கிடந்தது. அதனருகே சிலர் நின்று கொண்டிருந்தனர். இதை கவனித்த ராகுல் விபத்து நடந்து இருப்பதை உணர்ந்தார். இதையடுத்து அவர் தனது காரை நிறுத்தக்கூறி வேகமாக கீழே இறங்கினார்.
அதன்பிறகு அவர் காரில் இருந்து வேகவேகமாக விபத்து நடந்த இடத்துக்கு வந்து கீழே விழுந்த ஸ்கூட்டரை தூக்கி சாலையின் ஓரம் கொண்டு செல்ல உதவினார். அதன்பிறகு விபத்தில் சிக்கியவரிடம் நலம் விசாரித்து அங்கிருந்து புறப்பட்டார்.
இந்த வேளையில் ராகுல் காந்தி சாலையில் நிற்பதை கவனித்த பலரும் அவரை நெருங்க முயன்றார். ஆனால் ராகுல் காந்தியின் பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இந்த வேளையில் அவர்கள் ராகுல்.. ராகுல்.. என அவரை அழைத்தனர். இருப்பினும் நாடாளுமன்ற விவாதத்துக்கு நேரம் ஆகிவிட்டால் ராகுல் காந்தி அங்கிருந்து வேகவேகமாக காரில் புறப்பட்டு சென்றனார்.
#WATCH | Delhi | While exiting 10 Janpath, Congress MP Rahul Gandhi, got off his car to inquire on a scooter-rider who got into an accident nearby. pic.twitter.com/5YprbtRc2K
— ANI (@ANI) August 9, 2023
இந்நிலையில் தான் விபத்தில் சிக்கிய நபரிடம் காரை நிறுத்தி இறங்கி சென்று ராகுல் காந்தி நலம் விசாரித்தது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications