புதுச்சேரியில் களமிறங்கும் வைத்திலிங்கம்.. வெளியானது காங்கிரஸ் கட்சியின் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல்
டெல்லி: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் புதுச்சேரியில் வைத்திலிங்கம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் கடந்த 2019ம் ஆண்டை போலவே, 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. காங்கிரஸை பொறுத்த அளவில் இரண்டு கட்டங்களாக ஏற்கெனவே வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை டெல்லியில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கூட்டாக செய்தியார்களை சந்தித்தனர். அதில், தேர்தல் ஜனநாயக முறையில் நடத்தப்படுவது அவசியம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார். பேட்டியின்போது அவர் பேசுகையில்,
"தேர்தல் பாரபட்சமின்றி நடத்தப்படுவது ஜனநாயகத்திற்கு அவசியமானது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதற்கு சமநிலையில் வாய்ப்பு இருக்க வேண்டும். தேர்தல் பத்திர முறைகேடு சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்படுகின்றன" என்று மத்திய அரசின் மீது விமர்சனங்களை அடுக்கினார்.
இவரை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "30 ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்னைக்காக தற்போது காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. ரூ.14 லட்சம் வருமான வரி பிரச்னைக்காக காங்கிரஸின் ஒட்டுமொத்த நிதியும் முடக்கப்பட்டது. ஒரு குடும்பத்தின் நிதி ஆதாரம் அனைத்தும் முடக்கப்பட்டால் அந்த குடும்பம் எப்படி பசியால் வாடுமோ அதுபோல் காங்கிரஸ் கட்சி உள்ளது. ஒட்டுமொத்த நிதி ஆதாரமும் முடக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினரால் பேருந்து, ரயில்களில் பயணிக்க கூட முடியவில்லை.
தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்னர் வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் இதை திட்டமிட்ட செயல் என்றே நாங்கள் கூறுகிறோம். வங்கி கணக்கு முடக்கம் விவகாரத்தில் நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ எந்தை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாஜக அழித்துவிட்டது" என்று விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து தற்போது காங்கிரஸ் கட்சியின் 57 பெயர்களை கொண்ட மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் அருணாச்சலப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் நபம் துகி, அருணாச்சல் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல, கர்நாடகாவில் குல்பர்கா தொகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷண்னா களம் இறஙக்குகிறார். புதுச்சேரியில் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.
-
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications