மோடியை புகழ்ந்த இம்ரான் கான்.. பின்னணியில் காங். இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் திடுக் பேட்டி!
பிரதமர் மோடியை வீழ்த்துவதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து வருகிறார் என்று பாஜகவை சேர்ந்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: பிரதமர் மோடியை வீழ்த்துவதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து வருகிறார் என்று பாஜகவை சேர்ந்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் இந்திய தேர்தல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து இருந்தார். அதில் இந்தியாவில் பாஜக ஆட்சி மீண்டும் வரும் பட்சத்தில் அது காஷ்மீர் பிரச்சனையில் தீவிரமான முடிவுகளை எடுக்க வாய்ப்பு இருக்கிறது.
காஷ்மீர் பிரச்சனை ராணுவம் மூலம் தீர்க்கப்பட கூடிய ஒன்று கிடையாது. இது பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும். இந்திய ராணுவத்தால் காஷ்மீர் மக்கள் பெரிய கஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர், என்றார்.

என்ன கூறினார்
மேலும் காஷ்மீர் பிரச்சனையை காங்கிரஸ் கட்சி தீர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அவர்களுக்கு அந்த தைரியம் இருக்கிறதா என்று தெரியவில்லை. மாறாக பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் பிரச்சனையில் ஏதாவது முடிவை எடுக்க வாய்ப்புள்ளது, என்றும் குறிப்பிட்டார்.

நிர்மலா சீதாராமன்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாகிஸ்தான் பிரதமர் பேசியது குறித்து நான் கருத்து கூற விரும்புகிறேன். ஆனால் நான் இப்போது கூறுவது என்னுடைய கருத்து மட்டுமே. இது அமைச்சகத்தின் கருத்து இல்லை. இது பாஜகவின் கருத்தும் கிடையாது என்பதை கூறிக்கொள்கிறேன்.

இம்ரான் கான்
இம்ரான் கான் மோடிதான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று கூறியதற்கு பின் காங்கிரஸ் இருக்கிறது என்று நினைக்கிறேன். காங்கிரஸ் செய்த சூழ்ச்சி இது என்று எனக்கு தோன்றுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் பலர் பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்று இருக்கிறார்கள்.

மோடிதான்
அவர்கள் மோடியை வீழ்த்துவதற்கு பாகிஸ்தானிடம் உதவி கேட்டு இருக்கிறார்கள். அதனால் தற்போது இம்ரான் கான் இப்படி பேசுவதாக எனக்கு தோன்றுகிறது . இது காங்கிரஸ் கட்சியின் திட்டம்தான். இதை வைத்து அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை, என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications