காங்கிரஸ் “தலையெழுத்தை” மாற்றும் கூட்டம்.. அடுத்த தலைவர் யார்? 28ம் தேதி கூடும் செயற்குழு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெறும் நாளை முடிவு செய்வதற்காக அக்கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்டு 28 ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக கூடுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார். அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் செய்யப்படவில்லை.

காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியடைந்ததால் அக்கட்சிக்குள் பூசல்கள் வெடித்தன.

உட்கட்சி பூசல்

உட்கட்சி பூசல்

காந்தி குடும்பம் அல்லாத தலைமை வேண்டும் என்று கோரிக்கைகள் கட்சிக்குள் எழத் தொடங்கின. கட்சித் தலைமைக்கு எதிராக குலாம் நபி ஆசாத் தலைமையிலான மூத்த தலைவர்களை கொண்ட ஜி - 23 என்ற அதிருப்தி குழு செயல்பட்டு வருகிறது. கபில் சிபல் கட்சியிலிருந்து விலக, ஆனந்த் சர்மா, குலாம் நபி தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளையும் துரந்தனர்.

ராகுல் நடைபயணம்

ராகுல் நடைபயணம்

இந்த நிலையில் குஜராத் தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து நடைபெற்ற போராட்டங்கள், பீகார் ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களால் காங்கிரஸ் கட்சியில் புத்துணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. இதற்கிடையே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராகுல் காந்தி செப்டம்பர் 7 ஆம் தேதி மக்களை சந்திக்க பாத யாத்திரை செல்ல இருக்கிறார்.

 சோனியா உடல்நிலை

சோனியா உடல்நிலை


இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பதவி வகித்து வரும் சோனியா காந்தியின் உடல்நிலை முன்பை போல் கட்சிப் பணியாற்ற ஒத்துழைப்பதில்லை. வயது மூப்பு மற்றும் அவர் செய்துகொண்ட அறுவைச் சிகிச்சை காரணமாகவும் அடிக்கடி ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு சோனியா தள்ளப்படுகிறது.
மீண்டும் ராகுல் காந்தி கட்சித் தலைவராக வேண்டும் என்று தலைவர்கள் பலர் வலியுறுத்தியும் அவர் ஏற்கவில்லை.

புதிய தலைவர் யார்?

புதிய தலைவர் யார்?

பிரியங்கா காந்தியை தலைவராக்க வேண்டும் என சில குரல்கள் ஒலித்தாலும் அதை அவரே விரும்பவில்லை என்றே சொல்லப்படுகிறது. புதிய தலைவராக காந்தி குடும்பத்தை சாராத நபர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதில், முதன்மையாக இருப்பது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்.

காங்கிரஸ் செயற்குழு

காங்கிரஸ் செயற்குழு

இந்த நிலையில் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக ராகுல் மற்றும் பிரியங்காவுடன் வெளிநாடு செல்லவுள்ளதாக அக்கட்சி அறிவித்தது. இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சி மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், "காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெறும் தேதியை முடிவு செய்வதற்காக அக்கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்டு 28 ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக கூடுகிறது. சோனியா காந்தி இதற்கு தலைமை வகிப்பார்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+