எவரும் கொடுக்காத வாக்குறுதி! அனைவருக்கும் குறைந்தபட்ச சம்பளம் உறுதி.. காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு!
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் இப்போது களைகட்ட தொடங்கி இருக்கிறது. பிரியங்கா காந்தியின் வருகைக்கு பின் காங்கிரஸ் புத்துயிர் பெற்றுள்ளது.
இந்த நிலையில் அதிரடியாக தற்போது காங்கிரஸ் குறைந்தபட்ச பொதுவான வருமானம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதுவரை எந்த அரசும் செய்யாத அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

என்ன இது
பொதுவான குறைந்தபட்ச வருமானம் என்பதை ஆங்கிலத்தில் Universal Basic Income ( UBI) என்று அழைப்பார்கள். இதன்படி நாம் என்ன வேலை பார்த்தாலும், எந்த பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்தியாவில் இருக்கும் எல்லோருக்கும் குறைந்தபட்ச சம்பளம் ஒன்று வழங்கப்படும். அதாவது இந்தியாவில் சம்பளம் வாங்காத நபர் ஒருவர் இருக்கவே மாட்டார். இது உலகில் சில நாடுகளில் மட்டும் நடைமுறையில் உள்ளது.

காங்கிரஸ் அறிமுகம்
இதைத்தான் காங்கிரஸ் கொண்டு வர உள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச வருமானம் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும். நாட்டில் ஏழைகளே இருக்க கூடாது, என்றுள்ளார்.
|
ராகுல் டிவிட்
இதுகுறித்து ராகுல் காந்தி செய்துள்ள டிவிட்டில், ''இதுவரை எந்த அரசும் செய்யாத விஷயத்தை நாங்கள் செய்ய போகிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்க திட்டம் கொண்டு வர போகிறோம். பசி மற்றும் வறுமையை ஒழிக்க இந்த திட்டம் பெரிய உதவியாக இருக்கும். 2019 தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் இந்த வாக்குறுதியை நிறைவேற்றும்.

பாஜக திட்டம்
முன்னதாக பாஜக இந்த திட்டத்தை தனது தேர்தல் வாக்குறுதியில் அளிக்கலாம் என்று இருந்ததாக தகவல்கள் கசிந்தது. அதேபோல் சிக்கிமில் சில நாட்களுக்கு முன்புதான் குறைந்தபட்ச வருமானம் அறிமுகம் செய்யப்படும் என்று அம்மாநில ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி அறிவித்தது. தற்போது காங்கிரஸ் அதை தேர்தல் வாக்குறுதியாக கூறியுள்ளது.
-
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?











Click it and Unblock the Notifications