Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் கட்சியில் யார் யாருக்கு சீட்? வெளியானது முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் - முழு லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சி 39 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அண்மையில் பாஜக தமது முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. 195 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். 195 வேட்பாளர்களில் 28 பேர் பெண்கள், 47 பேர் இளைஞர்கள், 27 பேர் எஸ்சி, 18 பேர் எஸ்டி, 57 பேர் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பாஜகவின் 195 பேர் கொண்ட முதல் வேட்பாளர்கள் பட்டியலில் 41 சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை.

Congress releases first phase Candidates list for 39 lok sabha constituencies

பாஜக வேட்பாளர் பட்டியல்: உத்தர பிரதேசத்தில் 51, மேற்கு வங்கத்தில் 20, மத்திய பிரதேசத்தில் 24, குஜராத்தில் 15, ராஜஸ்தானில் 15, கேரளாவில் 12, சட்டீஸ்கரில் 11, தெலங்கானாவில் 9, அசாமில் 11, டெல்லியில் 5, ஜம்மு காஷ்மீரில் 2, உத்தராகண்டில் 3, அருணாச்சல பிரதேசத்தில் 2, கோவாவில் 1, திரிபுராவில் 1, அந்தமானில் 1, டையூ-டாமனில் 1 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் இடம்பெற்றுள்ள 'இந்தியா' கூட்டணியில் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்டவைகளுடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தமது முதலாவது வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் பத்திரிகையாளர்களைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி: ராகுல் காந்தி மீண்டும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆழப்புழா தொகுதியில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் போட்டியிடுகிறார்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் தம்பி டி.கே.சுரேஷ், பெங்களூர் ஊரக தொகுதியில் போட்டியிடவுள்ளார். முன்னாள் கேரள முதல்வர் கருணாகரனின் மகன் கே.முரளீதரன் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிர மூத்த தலைவர் சசிதரூர் திருவனந்தபுரத்தில் மீண்டும் களம் இறங்குகிறார்.

Congress releases first phase Candidates list for 39 lok sabha constituencies

பூபேஷ் பாகல்: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் ராஜ்நந்த்கோவன் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். கர்நாடகத்தின் ஷிமோகா தொகுதியிலிருந்து கீதா சிவராஜ் குமார் போட்டியிடவுள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் மனைவி கீதா ராஜ்குமார் ஷிமோகா தொகுதியில் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலில், 24 வேட்பாளர்கள் OBC, SC & ST பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் 15 பொது வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால், அவர் வழக்கமாக போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

9 மாநிலங்களில்: இன்று 9 மாநிலங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ். சத்தீஸ்கர் மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கும், கர்நாடகா மாநிலத்தில் 7 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

மேலும், தெலுங்கானா மாநிலத்தில் 4 தொகுதிகள், லட்சத்தீவு, மேகலாயாவில் தலா 2 தொகுதிகள், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ். விரைவில் அடுத்த கட்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் வேட்பாளர் முதற்கட்ட முழு பட்டியல்

கேரளா

1. காசர்கோடு- ராஜ்மோகன் உன்னிதன்

2. கண்ணூர்- கே.சுதாகரன்

3. வடகரா- ஷாபி பரம்பில்

4. வயநாடு- ராகுல் காந்தி

5. கோழிக்கோடு- எம்.கே.ராகவன்

6. பாலக்காடு- வி.கே.ஸ்ரீகண்டன்

7. ஆலத்தூர் (SC)-திருமதி. ரம்யா ஹரிதாஸ்

8. திருச்சூர்- கே.முரளீதரன்

9. சாலக்குடி- பென்னி பஹன்னன்

10. எர்ணாகுளம்- ஹைபி ஈடன்

11. இடுக்கி - டீன் குரியகோஸ்

12. மாவேலிக்கரா (SC)- கொடிக்குன்னில் சுரேஷ்

13. பத்தனம்திட்டா- ஆண்டோ ஆண்டனி

14. அட்டிங்கல்- அடூர் பிரகாஷ்

15. திருவனந்தபுரம்- டாக்டர் சசி தரூர்

16. ஆழப்புழா - கேசி வேணுகோபால்

கர்நாடகா

1. பிஜாப்பூர் (SC)- HR அல்குர் (ராஜூ)

2. ஷிமோகா- கீதா சிவராஜ்குமார்

3. ஹாசன்- எம். ஷ்ரேயாஸ் படேல்

4. தும்கூர் - எஸ்பி முத்தஹனுமேகவுடா

5. மாண்டியா - வெங்கடராமகவுடா (ஸ்டார் சந்துரு)

6. பெங்களூர் ரூரல்- டி.கே.சுரேஷ்

7. ஹவேரி - ஆனந்த்சுவாமி கட்டதேவர மத்

சத்தீஸ்கர்

1. ஜாங்கிர் - சம்பா (SC)- டாக்டர் ஷிவ்குமார் தஹாரியா

2. கோர்பா- ஜோத்சனா மஹந்த்

3. ராஜ்நந்த்கான்- பூபேஷ் பாகேல்

4. துர்க் - ராஜேந்திர சாஹு

5. ராய்ப்பூர்- விகாஸ் உபாதயாய்

6. மஹாசமுந்த்- தர்த்வாஜ் சாஹு

தெலுங்கானா

1. ஷாகிராபாத் - சுரேஷ் குமார் ஷெட்கர்

2. மகபூப்நகர் - சல்லா வம்ஷி சந்த் ரெட்டி

3. நல்கொண்டா - ரகுவீர் குண்டூரு

4. மகபூபாபாத் (எஸ்டி) - பல்ராம் நாயக் போரிகா

லட்சத்தீவு

லட்சத்தீவு (எஸ்டி): முகமது ஹம்துல்லாஹா சயீத்

மேகாலயா

ஷில்லாங் (எஸ்டி) - வின்சென்ட் எச் பாலா

துரா (எஸ்டி) - சலெங் அ சங்மா

நாகாலாந்து

நாகாலாந்து - எஸ் சுபோங்மெரென் ஜமீர்

சிக்கிம்

சிக்கிம் - கோபால் செட்ரி

திரிபுரா

திரிபுரா மேற்கு - ஆசிஷ் குமார் சாஹா

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+