மோடி பேச்சைப் பார்த்தா பாஜக கப்பல் மூழ்குவது 'கன்பார்ம்'... காங். நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடியின் தொடர்ச்சியான விரக்தி பேச்சுகள், பாஜக என்கிற கப்பல் மூழ்கப் போகிறது என்பதையே வெட்ட வெளிச்சமாக்குகிறது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுர்ஜிவாலா கூறியதாவது:

பிரதமர் மோடி தொடர்ந்து விரக்தியாக பேசி வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இழிவாக விமர்சித்தும் வருகிறது.

congress slams pm modi speeches

திடீரென மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு வங்க அரசாங்கத்தை கட்சி தாவல் மூலம் கவிழ்த்துவிடுவேன் என மிரட்டிக் கொண்டிருக்கிறார். பின்னர் ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்புகிறார்.

மோடியின் இந்த பேச்சுகளைப் பார்க்கும் போது நிச்சயம் பாஜக என்கிற கப்பல் மூழ்கத்தான் போகிறது என்பது அப்பட்டமாகவே தெரிகிறது. இது காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்குத்தான் சாதகமாக இருக்கும்.

congress slams pm modi speeches

இத்தேர்தலில் தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களைப் பெற உள்ளது. எங்கள் கட்சியினர் அளித்திருக்கும் கள நிலவரப்படி இம்முறை 100 இடங்களுக்கு அதிகமாக நாங்கள் வெல்வோம்.

இவ்வாறு சுர்ஜிவாலா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+