குஜராத்துக்கு குறி வைக்கும் காங்கிரஸ்? சோனியாவை சந்தித்த பிரசாந்த் கிஷோர் - கட்சியில் இணைய திட்டம்
டெல்லி: பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்து இருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியதை தொடர்ந்து அக்கட்சிக்குள் இருந்த உட்கட்சிப்பூசல் வெட்டவெளிச்சமானது.
தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலக, சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக பதவியேற்றார். 2 ஆண்டுகளாகியும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்காமல் அக்கட்சி உள்ளது.

5 மாநில தேர்தல் படுதோல்வி
இந்த நிலையில் நடந்த முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. அதன் பின்னர், காங்கிரஸ் கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும், காந்தி குடும்பத்தை சாராதவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன.

காங்கிரஸ் ஆலோசனை
இதனை தொடர்ந்து தொடர் தோல்விகளில் இருந்து காங்கிரஸை மீட்க அதிருப்தி தலைவர்களுடனும் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டார். செயற்குழு கூட்டத்திலும் பல்வேறு கருத்துக்களை அக்கட்சியினர் தெரிவித்தனர். அவர்களில் பலர் எதிர்வரும் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற பிரசாந்த் கிஷோரை கட்சியில் இணைக்க வேண்டும் என பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பு
இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்த ஐ-பேக் தலைவரும் தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள சோனியா காந்தி வீட்டுக்கு பிரசாந்த் கிஷோர் சென்றுள்ளனர்.

மூத்த தலைவர்கள் பங்கேற்பு
சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற பிரசாந்த் கிஷோர் உடனான சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, திக்விஜய் சிங், அம்பிகா சோனி, அஜய் மக்கான், கே.சி.வேணுகோபால் ஆகியோர் பங்கேற்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து முடிவெடுக்கப்பட்டு அது கைவிடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

குஜராத் தேர்தல் வியூகம்
குஜராத்தில் பெருவாரியாக வசிக்கும் பட்டேல் சமுதாய மக்களின் வாக்குகளை அறுவடை செய்யவும் பல்வேறு காய்களை நகர்த்தி வருகிறது காங்கிரஸ். ஹர்திக் பட்டேலின் ஆதரவை கடந்து அதன் துணை சாதிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களை கட்சியில் சேர்க்க முயன்று வருகிறது. அதன் வெளிபாடாகவே பிரபல தொழிலதிபரும் லேவா பட்டேல் சமுதாய தலைவருமான நரேஷ் பட்டேலை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது காங்கிரஸ்.

நரேஷ் பட்டேலின் ஒற்றை நிபந்தனை
லேவா பட்டிதார் அமைப்பின் தலைவரும் கோடியார் கோவிலை நிர்வகித்து வரும் கோடல்தாம் கோவில் அறக்கட்டளையின் தலைவருமான நரேஷ் பட்டேல் குஜராத்தில் மிகப்பிரபலமான முகமாக அறியப்படுகிறார். இவரை தங்கள் கட்சியில் சேர்த்தால் பாஜகவுக்கு நெருக்கடி தர முடியும் என்பது காங்கிரஸின் நம்பிக்கை. காங்கிரஸின் அழைப்புக்கு சம்மதம் தெரிவித்துள்ள நரேஷ் பட்டேல், ஒரு நிபந்தனையை விதித்து இருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர் ஏன்?
அதுதான், தமிழ்நாடு, மேற்குவங்கத்தைபோல் குஜராத்தில் பிரசாந்த் கிஷோரை வைத்து தேர்தல் வியூகங்களை காங்கிரஸ் வகுக்க வேண்டும் என்பது. பிரஷாந்த் கிஷோரும் குஜராத் காங்கிரஸின் முகமாக பட்டேலை முன்னிருத்த வேண்டும் என விரும்புவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரஷாந்த் கிஷோருக்கும் காங்கிரஸுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் உள்ளன.

காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு
இத்தகைய சூழலில் பிரஷாந்த் கிஷோர் மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், பிரஷாந்த் கிஷோரும் நரேஷ் பட்டேலும் கூட்டு வைத்துக்கொண்டு செயல்படுவதாக குற்றம்சாட்டினர். இந்த நிலையில்தான் நரேஷ் பட்டேலின் கோரிக்கையை ஏற்று பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் தலைமை அணுகியதாக கூறப்படுகிறது.
-
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications