காங்கிரஸ் கடுமையான விலை கொடுக்க போகிறது.. பொங்கி எழும் மாயாவதி.. இதுதான் காரணம்!
பகுஜன் சமாஜ் கட்சியை எதிர்த்தால் காங்கிரஸ் கட்சி மிக மோசமான விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்து உள்ளார்.
டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியை எதிர்த்தால் காங்கிரஸ் கட்சி மிக மோசமான விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இடையில் நாளுக்கு நாள் பிளவு ஏற்பட்டுக் கொண்டே வருகிறது. தற்போது நாடு முழுக்க லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது.
இதுவரை 4 கட்ட லோக்சபா தேர்தல்கள் நடந்து முடிந்து இருக்கிறது. லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி வரும், யார் ஆட்சி அமைக்க போவது என்பது குறித்த பல விவாதங்கள் நடந்து வருகிறது.

மத்திய பிரதேச ஆட்சி
மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தலில் 231 இடங்களில் காங்கிரஸ் கட்சி 113ல் வென்றது. அங்கு ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவை. இதனால் 2 பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை உதவியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்து வருகிறது. இதில்தான் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

மாற்றம்
மத்திய பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறி வருகிறார்கள். கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் சுமார் 20 தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு மாறிவிட்டனர். இதில் சில முக்கிய தலைவர்கள், எம்.பிக்கள் , முன்னாள் எம்.எல்.ஏக்களும் அடங்குவர். இது தற்போது மாயாவதிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாயாவது கோபம்
அதன்படி, காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் ஆட்களை தொடர்ந்து தனது கட்சிக்கு இழுத்தால் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க வேண்டி இருக்கும் என்று மாயாவதி பேசி உள்ளார். இது தொடர்பாக மாயாவதி அளித்துள்ள பேட்டியில், காங்கிரஸ் கட்சி எங்கள் உறுப்பினர்களுக்கு வலைவீசுவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

வாஜ்பாய் ஆட்சி
காங்கிரஸ் ஆட்சியை நாங்கள் நினைத்தால் கவிழ்க்க முடியும். ஏற்கனவே வாஜ்பாய் அரசுக்கு நாங்கள் செய்ததை காங்கிரசுக்கு செய்ய வேண்டி இருக்கும். காங்கிரஸ் எங்களை எதிர்த்தால் மிக மோசமான விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று மாயாவதி குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் காங்கிரஸ் கட்சி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இடையில் நாளுக்கு நாள் பிளவு ஏற்பட்டுக் கொண்டே வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications