Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளியானது லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.. 25 முக்கிய வாக்குறுதிகள் இதுதான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வரும் லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதில் பெண்கள், இளைஞர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விவசாயிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ன. அதன் 25 முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:

இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்ட தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளது. கடைசியாக 7வது கட்ட தேர்தல் ஜுன் 1ம் தேதி நடக்கிறது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Congress will Release Lok Sabha Election 2024 Manifesto today

இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக உள்பட மொத்தம் 25க்கும் அதிகமான கட்சிகள் உள்ளன.

இந்த லோக்சபா தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். கடந்த 2014, 2019 தேர்தல்களில் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டும் 3 இலக்க தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய சூழலுக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தேர்தலில் ஒவ்வொரு கட்சிக்கும் வலு சேர்க்கும் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட உள்ளது. அதில் வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடித்தால் நாட்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தற்போதைய தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ப சிதம்பரம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் உள்பட மூத்த தலைவர்கள் வெளியிட்டனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்களை கவரும் வகையில் முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

* அதன்படி மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

* ரயில் மற்றும் பஸ் போக்குவரத்துக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்தப்படம்.

* தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் முதியவர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்களுக்கு வழங்கப்படம் ஓய்வூதியத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பு மாதத்திற்கு ரூ.200 முதல் ரூ.500 வரை பரிதாபகரமாக உள்ளது. இந்த தொகையை காங்கிரஸ் மாதம் ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஏழை பெண்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நேரடியாக செலுத்தப்படும். அனைத்து துறைகளிலும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

* நாடு முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

* அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும்.

* அங்கன்வாடிகளில் கூடுதலாக 14 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* மனித கழிவுகளை மனிரே அள்ளும் நடைமுறை ஒழிக்கப்படும்.

* மத்திய அரசு பணிகளில் 50 சதவீதம் வரை பெண்களுக்கு இடஒதுக்கீடு.

* மாணவர்கள் பிரச்சனைகளை தீர்க்க ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்படும்.

* தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் இடஒதுக்கீடு வழங்க தனி சட்டம் இயற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 21 வயதுக்கு கீழே உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை.

* மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் உ்ள குறைகளை களையும் வகையில் மறு ஆய்வு செய்யப்படும்.

* அனைத்து மொழிகளிலும் பிரெய்லி மற்றும் சமிக்ஞை அங்கீகரிக்கப்படும்.

* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் .

* ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் - காங்கிரஸ்

* எல்ஜிபிடி சமூகத்தினரின் திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்.

* 100 நாள் வேலைத்திட்டத்தின் தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும்.

* தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியம் என்பது நாளொன்று ரூ.400 என்பது உறுதி செய்யப்படும்.

* அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனை மற்றம் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும்.

* மாநிலம் வாரியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

*

* டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு பொதுத்துறையில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும். பழகுநர் பயிற்சி மேற்கொள்ள ஆண்டுக்கு ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை நிதி வழங்கப்படும்

* ஒரேநாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படாது. தேர்தலில் பழைய முறையே தொடரும்.

* பாஜக அரசு கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+