உ.பியில் காங்கிரஸ் கட்சிக்கு 1 சீட் தான்.. அப்போ ராகுல் நிலை? News Nation Exit poll ரிசல்ட் இதோ!
டெல்லி: நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 342 முதல் 378 இடங்களை கைப்பற்றும் என நியூஸ் நேஷன் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது. ஏழாவது கட்டமாக 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்துடன் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் நடந்து வந்த லோக்சபா தேர்தலும் முடிவுக்கு வந்தது. தேர்தல் முடிவுகளுக்காக நாட்டு மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

நியூஸ் நேஷன் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பின்படி, பாஜக தனியாக 295 முதல் 327 இடங்களைப் பெறக்கூடும். அதேசமயம் தேசிய ஜனநாயக கூட்டணி 342 முதல் 378 இடங்களை கைப்பற்றும். மூலம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு 153 முதல் 169 இடங்களும், மற்றவர்களுக்கு 21 முதல் 23 இடங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் என்.டி.ஏ கூட்டணி அதிக இடங்களைப் பெறுகிறது என்பது நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெளிவாகத் தெரிகிறது. நியூஸ் நேஷன் எக்ஸிட் போல் சர்வேயில் இருந்து இந்த முறை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக கூட்டணி 67 இடங்களையும், சமாஜவாதி கட்சி 9 இடங்களையும் காங்கிரஸ் கட்சி 1 இடத்தையும் பெறலாம் என்பது நியூஸ் நேஷன் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகள்.
உ.பி.,யில், பாஜக 75 இடங்களில் தேர்தலில் போட்டியிட்டது, அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஐந்து இடங்கள் வழங்கப்பட்டன, அதில் அப்னா தளம் இரண்டு இடங்களிலும், ராஷ்டிரிய லோக்தளம் இரண்டு இடங்களிலும், சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிட்டன.
400-ஐ நெருங்கும் பாஜக கூட்டணி.. மொத்தமா அடிச்சு தூக்குதோ? காங்கிரஸை அதிரவைத்த ஜன் கி பாத் Exit poll
உ.பி.யில் இந்திய கூட்டணியில் காங்கிரஸ் 17 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 62 இடங்களிலும் போட்டியிட்டன. மேலும், டிஎம்சி ஒரு இடத்தில் போட்டியிட்டது. இந்த முறை காங்கிரஸ் தலைவர் ரேபரேலி தொகுதியிலும், அகிலேஷ் யாதவ் கன்னோஜ் தொகுதியிலும், அவரது மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரி தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர்.
இந்நிலையில் தான், காங்கிரஸ் கட்சி 1 இடத்தில் மட்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும், சமாஜ்வதி கட்சி 9 இடங்களில் வெல்ல வாய்ப்பு என்றும், பாஜக கூட்டணி 67 இடங்களில் வெல்லும் என்றும் நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications