400-ஐ நெருங்கும் பாஜக கூட்டணி.. மொத்தமா அடிச்சு தூக்குதோ? காங்கிரஸை அதிரவைத்த ஜன் கி பாத் Exit poll

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக கூட்டணி 392 இடங்கள் வரை கைப்பற்றும், இந்தியா கூட்டணிக்கு 161 இடங்களைத் தாண்டாது என ஜன் கி பாத் நிறுவனம் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இந்தக் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ள ஜன் கி பாத் நிறுவனம், கடந்த ஆண்டு நடந்த ராஜஸ்தான் சட்டசபை தேர்தல், தெலுங்கானா, மிசோரம் சட்டசபை தேர்தல் முடிவுகளை துல்லியமாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Exit Poll BJP Congress 2024

மக்களவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைந்துள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி ஜூன் 1 ஆம் தேதியான இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், வெற்றி பெற்று யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

பாஜக கூட்டணி 377 சீட்: அதன்படி, ஜன் கி பாத் நிறுவனம் நடத்திய எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளின்படி, பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 377 இடங்களையும் (362 - 392), இந்தியா கூட்டணி 151 (141- 161) இடங்களையும் மற்ற கட்சிகள் 10 முதல் 20 இடங்கள் வரையும் வெல்ல வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தனி கட்சியாக 312 - 342 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி தனியாக 42 முதல் 62 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் ஜன் கி பாத் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸுக்கு பின்னடைவு: வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை பாஜக 50 % வாக்குகளையும், இந்தியா கூட்டணி 35 % வாக்குகளையும், மற்றவர்கள் 15 % வாக்குகளையும் பெறக்கூடும், இதில் 1 சதவீதம் அளவில் முன் பின் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 இடங்களில் பாஜக 21- 26 இடங்களையும், காங்கிரஸ் 2 - 0 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 18 - 16 இடங்களையும், சிபிஎம் 1 - 0 இடங்களையும் பிடிக்கும் என ஜன் கி பாத் நிறுவனம் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

மாநிலங்களில்: ஜான் கி பாத் கருத்துக்கணிப்பின்படி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 34 முதல் 38 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதிமுகவிற்கு 1 தொகுதி கிடைக்கும் என்றும், பாஜக கட்சிக்கு 5 தொகுதிகள் கிடைக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 25 இடங்களில் பாஜக 2- 3 இடங்களையும், ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் 13 - 8 இடங்களையும், தெலுங்கு தேசம் கட்சி 10 - 14 இடங்களையும், பிடிக்கும் என ஜன் கி பாத் நிறுவனம் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 25 இடங்களில் பாஜக 64 - 70 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 1 இடத்தையும், சமாஜ்வாதி கட்சி 11 - 5 இடங்கள் வரையும் பிடிக்கும் என ஜன் கி பாத் நிறுவனம் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+