டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காதை கொண்டாங்க.. ரேபரேலி, அமேதி குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல்!

ரேபரேலி, அமேதி தொகுதி குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் இது.

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்த முதல் வேட்பாளர் பட்டியலில் ஒரு சுவாரஸ்யம் அடங்கியுள்ளது.

ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்தான் அந்த சுவாரஸ்யம் அடங்கியுள்ளது.

Congress won only 2 seats in UP in 2014 polls

கடந்த 2014 லோக்சபா தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்தத் தொகுதிகள் - ரேபரேலி, அமேதி.

பரூக்காபாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சல்மான் குர்ஷித் 2014 தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இன்னொரு மூத்த தலைவரான ஆர்.பி.என். சிங் குஷி நகரில் நிறுத்தப்படுகிறார்.

லோக்சபா தேர்தல்.. காங். முதல் பட்டியல் வெளியீடு.. ரேபரேலியில் சோனியா, அமேதியில் ராகுல் போட்டி! லோக்சபா தேர்தல்.. காங். முதல் பட்டியல் வெளியீடு.. ரேபரேலியில் சோனியா, அமேதியில் ராகுல் போட்டி!

ஜித்தின் பிரசாத் தராஹரா தொகுதியில் போட்டியிடவுள்ளார். அன்னு டான்டன் உன்னாவோ தொகுதியில் போட்டியிடுகிறார்.

உ.பியில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக ஏற்கனவே காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அதிரடியாக 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அது அறிவித்துள்ளது.

குஜராத்தைப் பொறுத்தவரை மூத்த தலைவர் பரத் சிங் சோலன்கி ஆனந்த் தொகுதியில் நிறுத்தப்படுகிறார். இவர் இதே தொகுதியிலிருந்து 2004, 2009 ஆகிய தேர்தல்களில் வென்றவHர் ஆவார். ஆனால் 2014ல் பாஜகவிடம் தோற்றுப் போனார்.

English summary
Congress had won just 2 seats in UP Lok sabha elections 2014 and they are Raebareli and Amethi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X