முதல்வர்களை தேர்வு செய்ய கோஷ்டிமோதல்? பிரதமர் மோடியை திடீரென சந்தித்த முக்கிய தலைகள்.. பரபர ஆலோசனை
டெல்லி : உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், கட்சித் தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கலந்துகொண்டனர்.
உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
யாரும் எதிர்பாராத விதமாக பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி பெருவெற்றி பெற்று பாஜக காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்த நிலையில், பகவத் மான் முதல்வராக பதவியேற்றார்.

பாஜக வெற்றி
இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மீண்டும் ஆட்சியை பிடிப்பதோடு, யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் 255 இடங்களைக் கைப்பற்றி பாஜக சாதனை படைத்தது. அதன் கூட்டணிக் கட்சிகள் மேலும் 18 இடங்களில் வெற்றி பெற்றன. கடந்த தேர்தலை விட இந்த எண்ணிக்கை 43 குறைவாக இருந்தது, ஆனால் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்தது.

நரேந்திர மோடியுடன் ஆலோசனை
இந்த நிலையில் உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கட்சியின் உயர்மட்டத் தலைமை, மாநிலத் தலைவர்களுடன் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிரதமரிடம் விளக்கமளிக்கப்படுவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், கட்சித் தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கலந்துகொண்டனர். ஆலோசனைக்கு பாரதிய ஜனதா கட்சியின் மத்திய பார்வையாளர்கள் நாளை 4 மாநிலங்களுக்கு செல்லவுள்ளனர் என்றும் தகவல் வெளீயாகியுள்ளது.

கோஷ்டி மோதல்
சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் நான்கில் பாஜகவின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, மாநிலத் தலைவர்களின் "உள் எதிர்பார்ப்புகளை" நிர்வகிப்பதற்கான சவாலை பாஜக எதிர்கொண்டுள்ள நிலையில், கோவா மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களில், அது கோஷ்டி பூசலாக நிர்வாகிகளிடையே போட்டி வளர்ந்துள்ளது. முதல்வர் பதவிக்கு பல வேட்பாளர்கள் உருவாகியுள்ள நிலையில்,
மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சராக 2வது முறையாக பிரேன் சிங் நீடிப்பார் என பாஜக இன்று அறிவித்தது.

உத்தரப் பிரதேசத்தில் யோகி
பிரோன் சிங், மற்ற முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்த பிஸ்வஜித் சிங் மற்றும் யும்னம் கேம்சந்த் ஆகியோருடன் கட்சியின் உயர்மட்டத் தலைமையைச் சந்தித்த ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை பதவியேற்பார் என்று பாஜக இந்த வார தொடக்கத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் அவரது அமைச்சரவையின் எண்ணிக்கைஅல்லது பல்வேறு அமைச்சகங்களுக்கான பெயர்கள் இறுதி செய்யப்படவில்லை. கடந்த ஆட்சியில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் துணை முதல்வராக இருந்த கேசவ் மவுரியா சேர்க்கப்படுவாரா இல்லையா என்பதுதான் முக்கிய கேள்வியாக் உள்ளது காரணம், கடந்த தேர்தலில் மவுரியா தோல்வியடைந்ததால் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications