டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாள் பாதிப்பில் பிரேசிலை முந்திய இந்தியா, மரணத்தில் அமெரிக்காவையும் விஞ்சியது!

Google Oneindia Tamil News

டெல்லி: ஒரு நாள் கொரோனா பாதிப்பில் பிரேசிலை அமெரிக்கா முந்தியுள்ளது. இதேபோல் கொரோனாவால் அமெரிக்காவைவிட இந்தியாவில் தான் அதிகம் உயிரிழந்துள்ளனர். ஒரு நாள் பாதிப்பில் 2வது இடத்தையும், ஒரு நாளே அதிகம் பேர் உயிரிழப்பில் 2வது இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் தொடர்ந்து 3வது இடத்தில் இந்தியா உள்ளது.

சீனாவில் டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 1,46,33,037 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,08,539 பேர் மரணம் அடைந்துவிட்டனர். இதேநேரம் உலகில் கொரோனாவில் இருந்து 87,30,163 பேர் குணம் அடைந்தனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 52,94,335 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

corona cases in worldwide : 14.4M conformed, 8.08M recovered

உலகிலேயே மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38,96,855 ஆக உயர்ந்துள்ளது, அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 20,99,896 ஆக உயர்ந்துள்ளது. 3வது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,18,107 ஆக உயர்ந்துள்ளது.

உலகிலேயே மிக அதிகபட்சமாக பிரேசிலில் நேற்று கொரோனாவால் ஒரே நாளில் 716 பேர் பலியாகி உள்ளனர். 2வது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 675 பேர் பலியாகி உள்ளனர். மெக்ஸிகோவில் கொரோனா தொற்றால் 528 பேர் பலியாகி உள்ளனர்.அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 392 பேர் பலியாகி உள்ளனர்.

சத்தமே இன்றி சாதித்த சென்னை.. மும்பை, பெங்களூர், டெல்லிக்கு வழிகாட்டியாகும் சத்தமே இன்றி சாதித்த சென்னை.. மும்பை, பெங்களூர், டெல்லிக்கு வழிகாட்டியாகும் "தலை நகர்".. பின்னணி!

உலகிலேயே மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரே நாளில் 63,584 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் கொரோனாவால் 24,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. அங்கு 6,109 பேருக்கு தொற்று ஒரு நாளில் உறுதியானது. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை 95 ஆக குறைந்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை 771,546 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,342 பேர் உயிரிழந்துள்ளனர்.

Recommended Video

    Corona இந்தியாவில் Stage-3 நிலையை எட்டிவிட்டது - IMA பரபரப்பு தகவல்

    English summary
    corona cases in worldwide : 14.4M conformed, 8.08M recoverd. 604K Deaths. US , brazil, india among top 3 countrys
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X