பரவும் கொரோனா வைரஸ்.. எதிர்கொள்ள மத்திய அரசு முழு ஆயத்தம்.. ஹெல்ப்லைன் நம்பர் அறிவிப்பு!
டெல்லி: கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் இந்தியா வர உள்ள இந்தியர்களுக்கு சிகிச்சையளிக்க தனிமையிடங்கள் ஏற்படுத்தும் பணிகளில் இந்திய ராணுவத்தின் முப்படைகளும் ஈடுபட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
சீனாவின் வுஹான் நகரைச் சேர்ந்த இந்திய மாணவர்களை இந்திய விமானங்கள் மீட்டு தாயகம் அழைத்து வந்த வண்ணம் உள்ளன.
விமான நிலையத்தில் ஸ்க்ரீனிங் செய்யும் பணிகளில் ஆயுதப்படை மருத்துவ சேவைகள் (AFMS) மற்றும் விமான நிலைய சுகாதார ஆணையம் (APHO) ஆகியவற்றின் கூட்டுக் குழு ஈடுபட்டு வருகிறது.

முப்படைகள்
சீனாவின் வுஹானில் இருந்து வரவிருக்கும் சுமார் 300 இந்திய மாணவர்களின் தனிமைப்படுத்தலுக்காக இந்திய ராணுவம் ஹரியானாவின் மானேசர் அருகே ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இட வசதியை உருவாக்கியுள்ளது. இந்த இடத்தில், தகுதிவாய்ந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் குழு மாணவர்களை பல வாரங்களுக்கு கண்காணிக்க முடியும்.

தனிமையிடங்கள்
இதேபோல சுமார் 2500 பேர் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர். அவர்களுக்கு தேவையான தனிமையான இடங்களை அமைப்பது, அவர்களை அங்கே அழைத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டும் என்று, தரைப்படை, விமானப்படை, கடல்படை என்ற முப்படைகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவிலும் பல்வேறு நகரங்களில் கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் பலருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச பயிற்சி
எனவே வரும் 18ம் தேதி விசாகபட்டிணத்தில் நடைபெற இருந்த சர்வதேச, கடற்படை பயிற்சியை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, ஏ.என்.ஐ என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற பரபரப்பான சூழலில், சர்வதேச பயிற்சியை மேற்கொள்வது சரியாக இருக்காது என்பது மத்திய அரசின் கருத்தாக உள்ளதாம்.

ஹெல்ப் லைன்
அரசு இதுதொடர்பாக ஹெல்ப்லைன் எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியா ஹெல்ப்லைன் எண்: + 91-11-23978046 கொரோனா வைரஸ் இந்தியா ஹெல்ப்லைன் மின்னஞ்சல்: [email protected]. இந்தியாவுக்கு வருபவர்களை சோதிப்பது முதல் உடனடி மருத்துவ சிகிச்சை அளிப்பது வரை வெவ்வேறு அமைச்சகங்களும், மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications