மோடி மயிலோடு பிஸி...உங்கள் உயிரை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் - ராகுல்காந்தி
பிரதமர் மோடி மயில்களோடு பிஸியாக இருப்பதால் உங்கள் உயிரை நீங்களே காப்பாற்றுங்கள் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவுகிறது. மோடி மயில்களோடு பிஸியாக இருப்பதால் உங்கள் உயிரை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். கொரோனா நோய்த்தொற்று இந்த வாரம் 50 லட்சத்தை எட்டும் பத்து லட்சம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி சில வாரங்களுக்கு முன்பு மயில்களுடன் இருப்பது போலவும் வாத்துக்களுடன் இருப்பது போலவும் எடுக்கப்பட்ட போட்டோக்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தன. இந்த படங்களை பாஜகவினர் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டிருந்தனர். இந்த பதிவிற்கு பலரும் எதிர்ப்பாகவும் பதிவிட்டனர்.

கொரோனா இந்தியாவில் நுழையத் தொடங்கியிருந்த மார்ச் மாதத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. தற்போது கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 48 லட்சத்தை கடந்து விட்டது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38 லட்சமாக உள்ளது.
இந்த நிலையில் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை போட்டிருக்கிறார். கொரோனா நோய்த்தொற்று இந்த வாரம் 50 லட்சத்தை எட்டும் 10 லட்சம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். திட்டமிடப்படாத லாக்டவுன் என்பது ஒரு நபரின் ஈகோவின் விளைவுதான். இதனால்தான் கொரோனா நாடு முழுவதும் பரவுகிறது. பிரதமர் மோடி மயில்களோடு பிஸியாக இருப்பதால் உங்கள் உயிரை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications