கொரோனாவுக்கு ஒரு நாள் உயிரிழப்பு 1,093 ஆக அதிகரிப்பு... உலகிலேயே முதலிடத்தில் இந்தியா!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு...முதல் இடத்தில் மகாராஷ்டிரா...2ஆம் இடத்தில் ஆந்திரா!!
இந்தியாவில் 59,01,571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 93,410 பேர் உயிரிழந்துள்ளனர், இதுவரை 4846168 பேர் மீண்டு வந்துள்ளனர். இன்னும் 9,61,159 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒரு நாள் இறப்பும், தொற்று பாதிப்பும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 13,00,757 பேருக்கு கொரோனா தொற்றுஏற்பட்டு, 34,761 பேர் உயிரிழ்ந்துள்ளனர். 9,92,806 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 2,72,775 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புனே

புனே

மகாராஷ்டிராவில் புனேவில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 2,77,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,534 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்து மும்பையில் 1,94,303 பேர் பாதிக்கப்பட்டு, 8,706 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்து தானே நகரில் 1,79,192 பேர் பாதிக்கப்பட்டு, 4,665 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு கோதாவரி

கிழக்கு கோதாவரி

நாட்டிலேயே இரண்டாவது இடத்துக்கு ஆந்திரப் பிரதேசம் முன்னேறியுள்ளது. இந்த மாநிலத்தில் 6,61,458 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 5,606 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாநிலத்தில் கிழக்கு கோதாவரியில் அதிகபட்சமாக 92,173 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 503 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு கோதாவரியில் 62,582 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 436 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை

சென்னை

நாட்டிலேயே தொற்று பாதிப்பில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இங்கு, 5,69,370 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 9,148 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 46,386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,13,836 பேர் குணமடைந்துள்ளனர்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

தமிழகத்தில் சென்னையில் அதிகபட்சமாக 1,60,926 பேருக்கு தொற்று ஏற்பட்டு 3,125 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 10,003 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,47,798 குணமடைந்துள்ளனர். அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 33,908 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 535 பேர் உயிரிழந்துள்ளனர். 2,353 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறனர்.

கோவை

கோவை

அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டத்தில் 31,220 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 535 பேர் உயிரிழந்து இருக்கும் நிலையில், 1,559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மாநிலத்திலேயே நான்காவது இடத்தில் இருக்கும் கோவையில் 29,057 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 408 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாவட்டத்தில் இன்னும் 4,801 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+