இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 58 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 58 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அரசு வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,571 ஆக உள்ளது. கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 939 ஆக உள்ளது.
கொரோனா வைரஸிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 7058 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,65,819 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தற்போது 21,200 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மகாராஷ்டிரா, குஜராத்தில் நேற்று அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு மாநிலங்களிலும் முறையே 522 மற்றும் 247 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டனர். இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அது போல் நேற்று இரவு மத்திய பிரதேசத்தில் இந்தூரில் 196 பேருக்கு கொரோனா உறுதியானது.
நேற்று முன் தினம் ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,975 ஆனது. இது மத்திய அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் 8,590- ஆகவும், குஜராத்தில் 3,548 ஆகவும், டெல்லியில் 3,108 ஆகவும், ராஜஸ்தானில் 2,262 ஆகவும், மத்திய பிரதேசத்தில் 2,165 ஆகவும் உத்தரப்பிரதேசத்தில் 1,986 ஆகவும், தமிழகத்தில் 1,937ஆகவும் ஆந்திரத்தில் 1,177 ஆகவும் தெலுங்கானாவில் 1,003 ஆகவும், மேற்கு வங்கத்தில் 649 ஆகவும், ஜம்மு காஷ்மீரில் 546ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் ஊரடங்கை உத்தரவை நீட்டிப்பதா இல்லை தளர்த்துவதா என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பிரன்ஸிங்கில் ஆலோசனை நடத்தினார்.
அதில் பெரும்பாலான முதல்வர்கள் லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு சிலர் தொழிற்சாலைகளை மட்டும் இயங்க அனுமதித்து விட்டு மற்ற இயக்கங்களை முடக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications