கொரோனாவுக்கு குளோரோகுய்ன் மருந்து.. கவனமாக இருக்கச் சொல்லும் டாக்டர்கள்..ஏன் தெரியுமா?
கொரோனாவிற்கு எதிராக குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஆகிய மருந்துகளை பயன்படுத்தினால் நிறைய பக்க விளைவுகள் வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: கொரோனாவிற்கு எதிராக குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஆகிய மருந்துகளை பயன்படுத்தினால் நிறைய பக்க விளைவுகள் வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா காரணமாக இந்தியாவில் இதுவரை 684 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 18 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பலியாகி உள்ளனர். இன்று மட்டும் 4 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனாவிற்கு என்ன மருந்தை பயன்படுத்தலாம் என்று உலக நாடுகள் குழம்பி வருகிறது. சில பகுதிகளில் கொரோனாவிற்கு எதிராக எச்ஐவி உள்ளிட்ட மருந்துகள் கூட கொடுக்கப்பட்டு வருகிறது.

என்ன மருந்து பரிந்துரை செய்தனர்
ஆனால் மத்திய சுகாதாரத்துறை கொரோனாவிற்கு எதிராக குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளது. அதிலும் கூட மிகவும் சீரியஸாக இருக்கும் நோயாளிகளுக்கு மட்டும் இந்த குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை பயன்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இரண்டுமே மலேரியாவிற்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகும்.

கொஞ்சம் மோசமான மருந்து
முதலில் மலேரியாவிற்கு எதிராக 1930களுக்கு முன் குய்ன் மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்பின் குளோரோகுய்ன் பயன்படுத்தப்பட்டது. தற்போது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பயன்படுத்தப்படுகிறது. இது மூன்றும் அதிக பின் விளைவுகளை கொண்ட மருந்துகள் ஆகும். இந்த மருந்துகளை உட்கொண்டால் தலைவலி, உடல் வலி, அதீத மன அழுத்தம், அயர்ச்சி, மூச்சு அடைப்பு, உடல்களில் வீக்கம், தோல் உரிதல், மூக்கில் இருந்து ரத்தம் வருதல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.

கொஞ்சம் பரவாயில்லை
இதில் குளோரோகுய்ன்தான் மிகவும் மோசமானது ஆகும். இதுதான் மிகவும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் அதைவிட கொஞ்சம் வலிமை குறைந்த மருந்து. ஆனால் இதன் பின் விளைவுகளும் கொஞ்சம் கடினமானதாக இருக்கும். இதன் கசப்புதன்மை பல மாதங்களுக்கு அப்படியே உடலில் இருக்கும். 1950ல்தான் இந்த மருந்து மலேரியாவிற்கு எதிராக பயன்பாட்டுக்கு வந்தது.

அதிகம் பயன்படுத்த வேண்டும்
இந்த நிலையில் கொரோனாவிற்கு எதிராக தற்போது குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் எபோலாவிற்கு எதிராக குளோரோகுய்ன் மற்றும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதில் பெரிய பலன் அளிக்கவில்லை. தற்போது சில நாடுகளில் சில இடங்களில் மட்டும், கொரோனாவிற்கு எதிராக குளோரோகுய்ன் மற்றும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பயன்படுத்தப்படுகிறது.

உயிரை கொல்லும்
இந்த குளோரோகுய்ன் மற்றும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஆகிய மருந்துகளை அதிகம் பயன்படுத்தினால் மட்டும்தான் கொரோனாவிற்கு எதிராக ஓரளவு சிறப்பாக செயல்படும். கொரோனாவை ஓரளவு கட்டுப்படுத்த வேண்டும் என்றால், இந்த குளோரோகுய்ன் மற்றும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் இதை அதிகம் பயன்படுத்தினால் அது உயிருக்கே கூட பாதிப்பு ஏற்படுத்தும்.

நைஜீரியாவில் என்ன நடந்தது?
நைஜீரியாவில் இதேபோல்தான் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை அதிகம் பயன்படுத்தியதால் இரண்டு பேருக்கு உடல் மிக மோசமான நிலைக்கு சென்றது. அவர்கள் உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கையின் பெயரில்தான் நைஜீரியா இந்த மருந்தை பயன்படுத்தியது. ஆனால் இந்த மருந்து அங்கு கொரோனாவை குணப்படுத்துவதை விட மிக மோசமான பின் விளைவுகளைத்தான் ஏற்படுத்தியது.

உலக சுகாதார மையம் அனுமதிக்கவில்லை
இந்த குளோரோகுய்ன் மற்றும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஆகிய மருந்துகளை கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்த உலக சுகாதார மையம் அனுமதி அளிக்கவில்லை. குளோரோகுய்ன் மற்றும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் குறித்து நிறைய ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும். கொரோனாவிற்கு எதிராக இது எப்படி செயல்படுகிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும், அதன்பின்தான் இதை பரிந்துரைக்க வேண்டும் என்று உலக சுகாதார மைய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications