கொரோனாவில் இருந்து உலகளவில் 2 கோடி பேர் மீண்டனர் - 9.07 லட்சம் பேர் மரணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 80 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 2,00,95,952 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9,07,919 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று தினசரியும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பாதித்து வருகிறது. கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் தினசரியும் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதித்து வருகின்றனர்.

Coronavirus death toll passes 9,00,000 worldwide

உலகம் முழுவதும் 2 கோடியே 80 லட்சத்து 19 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 70,15,905 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60,536 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவால் இதுவரை 9,07,919 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மரணங்கள் அமெரிக்காவிலும், பிரேசில் நாட்டிலும் அதிகம் நிகழ்ந்துள்ளன.
அமெரிக்காவில் 1.90 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 75ஆயிரம் பேர் கொரோனா பாதித்து மரணமடைந்துள்ளனர். மெக்சிகோ, பெரு, கொலம்பியா, சிலி மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் தினசரியும் சராசரியாக 5,600 க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். இறப்பு விகிதம் 800,000 முதல் 900,000 இறப்புகளுக்கு ஏற 18 நாட்கள் ஆகும். 700,000 முதல் 800,000 வரை செல்ல 17 நாட்கள் ஆனது.

இந்தியாவின் இறப்பு விகிதம் சுமார் 1 சதவிகிதம் ஆகும், அதே நேரத்தில் பிரேசில் மற்றும் அமெரிக்காவில் இறப்பு விகிதம் 3 சதவிகிதம் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+