டெல்லியில் மீட்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்ப முயன்ற 8 பேர் கைது- மதமாநாட்டில் பங்கேற்றவர்கள்!
டெல்லி: டெல்லியில் மீட்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்ப முயன்ற 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மதமாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்துள்ளது.
Recommended Video
நிஜாமுதீன் மத மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்ற பல மாநிலத்தவருக்கும் கொரோனா இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான வெளிநாட்டவரின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே டெல்லியில் இருந்து மலேசியாவுக்கு மீட்பு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.
இந்நிலையில் விமானத்தில் சந்தேகத்துக்குரிய 8 நபர்கள் பயணிக்க தயாராக இருந்தது தெரியவந்தது. இவர்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் 8 பேரும் நிஜாமுதீன் மத மாநாட்டில் பங்கேற்ற நிலையில் டெல்லியில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. தற்போது இந்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications