சீனாவை புரட்டி போட்ட கொரோனா.. சுதாரிக்கும் இந்தியா.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா ஜீனோம் சோதனைகளை அதிகரிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மாநில அரசுகள் கொரோனா கேஸ்களில் ஜீனோம் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று அரசு பரிந்துரை செய்துள்ளது.

சீனாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் நிலையில் இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சீனாவில் கொரோனா கேஸ்கள் தீவிரமாக பரவி வருகின்றன.

அங்கு தினசரி கேஸ்கள் 4000ஐ தாண்டி உள்ளது. மக்கள் பலர் சாரைசாரையாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா

கொரோனா

முக்கியமாக வயதானவர்கள் அதிக அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவில் இதுவரை கொரோனா காரணமாக 5,242 பேர் பலியாகி உள்ளனர். அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை அகற்றிய பின்தான் கேஸ்கள் அதிகரித்து உள்ளன. ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்படி, சீனாவின் அடுத்த ஏப்ரல் மாதத்திற்குள் 5 லட்சம் பேர் கொரோனா காரணமாக மரணம் அடையலாம் என்று கூறப்பட்டு உள்ளது. இல்லையென்றால் 15 லட்சம் பேர் வருட இறுதிக்குள் பலியாவார்கள் என்றும் ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்து உள்ளது.

மருத்துவமனை

மருத்துவமனை

சீனாவில் புதிய வகை கொரோனா பரவி வருகிறதோ என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது. அங்கு வயதானவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் வயதானவர்களுக்கு வேக்சின் போட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் இந்தியாவில் கொரோனா ஜீனோம் சோதனைகளை அதிகரிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மாநில அரசுகள் கொரோனா கேஸ்களில் ஜீனோம் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று அரசு பரிந்துரை செய்துள்ளது. புதிய வகை கொரோனா வேரியண்ட் இந்தியாவில் பரவுகிறதா என்று கண்டுபிடிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

சீனா

சீனா

ஒரு நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் வகைகள் பரவுகிறதா என்பதை ஜீனோம் ஆராய்ச்சி மூலம் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ஜீனோம் ஆராய்ச்சி மூலம் மட்டுமே கொரோனாவின் வகை என்னவென்று கண்டுபிடித்து, அதை பகுப்பாய்வு செய்ய முடியும். கொரோனா நோயாளிகளின் உடலில் எடுக்கப்பட்ட மாதிரிகளை இந்தியாவின் ஜீனோம் ஆராய்ச்சி அமைப்பான INSACOG ஆராய்ச்சி செய்து வருகிறது. ஒரு கொரோனா நோயாளியின் ஜீனோமை ஆய்வு செய்து, அந்த ஜீனோம் புதியதா அல்லது பழையதா என்பதை வைத்து அந்த கொரோனா குறித்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

இந்தியா

இந்தியா

சீனாவில் வரும் நாட்களில் கொரோனா கேஸ்கள், மரணங்கள் அதிகரிக்கலாம் என்ற தகவலால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அமெரிக்கா, தென் கொரியா, பிரேசில் ஆகிய நாடுகளிலும் கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு அவசர கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ஒருவேளை புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டால் அதை உடனே மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் நேற்று 112 புதிய கொரோனா கேஸ்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 3490 பேர் இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இந்தியாவில் ஜீனோம் ஆய்வு செய்ய 50 கூடங்கள் உள்ளன. இங்கு வரும் நாட்களில் அதிக அளவில் கொரோனா ஜீனோம் சோதனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+