நம்ம கெத்து.. 55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்கிறது இந்தியா
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா பாதித்த 55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோர்குயின் மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
Recommended Video
இந்தியாவின் மலேரியாவுக்கு எதிரான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துதான் இப்போது உலக நாடுகளுக்கான ஒரு வரப்பிரசாதம். உலக நாடுகளை பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது கொரோனா வைரஸ்.

இந்த கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தும் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் இம்மருந்தை தங்களுக்கு ஏற்றுமதி செய்தாக வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டியது. இந்தியாவும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது.
நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்து வருகிறது.
கொரோனா பாதிப்புகளின் தொடக்கத்தின் போது மருந்துகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து. சில நாட்களுக்கு முன்னர்தான் இந்த தடை நீக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதியாகிறது.
ஆப்கானிஸ்தான், பூட்டான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, மொரீசியஸ், மியான்மர், ஜாம்பியா, டொமினிக் குடியரசு, மடகாஸ்கர், உகாண்டா, புர்கினா பாசோ, நைஜர், மாலி காங்கோ, எகிப்து, ஆர்மீனியா, கஜகஸ்தான், ஈக்குவடார், ஜமைக்கா, சிரியா, உக்ரைன், சாட், ஜிம்பாப்வே, பிரான்ஸ், ஜோர்டான், கென்யா, நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், பெரு ஆகிய நாடுகளும் இந்தியாவிடம் இருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பெறுகின்றன.
ஆனால் பாகிஸ்தான் இம்மருந்தை கேட்டிருக்கிறதா? என்பதற்கான தகவல்கள் எதுவும் இல்லை. பெரும்பாலான நாடுகளுக்கு வர்த்தக ரீதியில்தான் இம்மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சில நாடுகளுக்கு உதவி என்ற அடிப்படையிலும் இம்மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications