இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 43,071; 24 மணிநேரத்தில் 955 பேர் மரணம்
டெல்லி: நாட்டின் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43,071 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 955 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,42,43,392. மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 39,87,407 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் அதிக பாதிப்பு
தற்போதைய நிலையில் பிரேசிலில்தான் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. பிரேசிலில் நேற்று மட்டும் 54,556 பேருக்கு கொரோனா உறுதியானது.

இந்தியாவின் ஒருநாள் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 43,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை தாண்டி உள்ளது. இந்தியாவில் 3,05,45,433 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

24 மணிநேரத்தில் 955 பேர் மரணம்
மேலும் நேற்று ஒருநாளில் 955 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். நாட்டின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,02,005 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 52,299 பேர் குணமடைந்தனர். நாட்டில் இதுவரை மொத்தம் 2,96,58,078 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் தற்போதைய நிலையில் 4,85,350 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 35 கோடியை தாண்டி உள்ளது. இதுவரை 35,12,21,306 பேர் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ளனர்.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications