Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாக்கிங்.. பாஜக இளம் தலைவர் சிந்தியாவிற்கு கொரோனா பாதிப்பு.. தாயாருக்கும் பரவியதால் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக இளம் தலைவர் மற்றும் முன்னாள் எம்பி ஜோதிராதித்யா சிந்தியாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

டெல்லியை தற்போது கொரோனா பரவல் உலுக்கி வருகிறது. இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் இருக்கும் டெல்லியில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 29943 ஆக உள்ளது.

இதுவரை டெல்லியில் 879 பேர் அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தற்போது அங்கு முக்கிய பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது.

ஜோதிராதித்யா சிந்தியா எம்பி

ஜோதிராதித்யா சிந்தியா எம்பி

இந்த நிலையில் பாஜக இளம் தலைவர் மற்றும் முன்னாள் எம்பி ஜோதிராதித்யா சிந்தியாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இவரின் தாயார் மாதவி ராஜே சிந்தியாவிற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தற்போது டெல்லியில் இருக்கும் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவரின் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.

எப்படி வந்தது

எப்படி வந்தது

சிந்தியா குடும்பத்தில் முதலில் ஜோதிராதித்யா சிந்தியாவிற்கு கொரோனா வந்தது. இவருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறி ஏற்பட்டது. இதையடுத்து இவருக்குமேக்ஸ் மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்டது. இதில் இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ராஜே சிந்தியாவிற்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா ஏற்பட்டுள்ளது.

பாஜக தலைவர்கள்

பாஜக தலைவர்கள்

இவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு எப்படி கொரோனா வந்தது என்று உறுதி செய்யப்படவில்லை. பாஜக தரப்பை இதனால் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. முன்னதாக பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ராவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாஜகவில் இருக்கும் வேறு முக்கிய தலைவர்களுக்கு கொரோனா இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் கெஜ்ரிவால்

முதல்வர் கெஜ்ரிவால்

டெல்லியில் முக்கிய தலைவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்று சந்தேகம் எழுந்து இருக்கிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா அறிகுறி உள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் . அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+