மூளையை தாக்கும் கொரோனா.. நோய் பாதிப்பு ஏற்படாதவர்களும் கூட தப்பவில்லை! பகீர் ஆய்வு முடிவுகள்
டெல்லி: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரவிய கொரோனா நம்மைப் படாதபாடு படுத்தி இருந்தது. இப்போதும் கூட கொரோனா தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகிறது. இதற்கிடையே கொரோனா மற்றும் ஊரடங்கு நமது மூளையின் வயதை அதிகரித்தாக நேச்சர் இதழில் வெளியான புதிய ஆய்வு கூறுகிறது. கொரோனா தாக்கினாலும் தாக்காவிட்டாலும் அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட அழுத்தம், தனிமைப்படுத்துதல் இதற்குப் பிரதான காரணமாகச் சொல்லப்படுகிறது.
கடந்த 2019 இறுதியில் பரவிய கொரோனா உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது அனைவருக்கும் தெரியும். உலக வல்லரசுகள் கூட இதில் இருந்த தப்பவில்லை. எல்லா நாடுகளும் மிக மோசமான இழப்புகளைச் சந்தித்தன. உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகள் என நிலைமை மோசமாக இருந்தது. இந்த இழப்புகளில் இருந்து மீண்டு வரவே நமக்குப் பல ஆண்டுகள் ஆனது.

கொரோனா ஆய்வுகள்
கொரோனா முடிந்தாலும் அது குறித்த ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகிறது. அதன்படி நடந்த ஒரு ஆய்வு முடிவு இப்போது நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கொரோனா காலத்தால் நமது மூளை சீக்கிரம் வயதானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கொரோனா காலமும் ஊரடங்கும் நமது மூளையைப் பாதித்ததுள்ளது. பெருந்தொற்றுக்கு முன்பு இருந்த மூளையின் ஸ்கேன்களை வைத்து ஒப்பிடும்போது, பெருந்தொற்று காலத்தில் மூளை வயதாகும் விகிதம் சுமார் 5.5 மாதங்கள் வரை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
வயதாகும் மூளை
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு மட்டுமின்றி, கொரோனாவால் பாதிக்கப்படாதவர்களுக்கும் இது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்கள், வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள், குறைந்த கல்வி மற்றும் வருமானம் உடையவர்கள் ஆகியோரின் மூளையில் இந்த பாதிப்பு அதிகமாக இருந்தது. இது குறித்து பிரபல ஆங்கில இதழுக்கு நரம்பியல் மருத்துவர் பத்மா ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதும் எந்தளவுக்கு முக்கியம் என்பதையே இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது" என்றார்.
கொரோனா காலத்தில் வைரஸ் பாதிப்பு ஏற்படாதவர்களின் மூளையும் சீக்கிரம் வயதாகி இருக்கிறது. வைரஸ் தொற்று மட்டுமல்ல, மன அழுத்தம், தனிமை, அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு இதற்குக் காரணமாகும். மனநலமும் சுற்றுப்புறமும் மூளையின் ஆரோக்கியத்தை எவ்வளவு பாதிக்கிறது என்பதை இது காட்டுகிறது. மேலும், எந்தவொரு நெருக்கடியையும் சமாளிக்க நாம் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
வேறு சிக்கல் என்ன!
இந்த ஆய்வு பெருந்தொற்று காலத்தில் மூளை எவ்வளவு சீக்கிரம் வயதாகி இருக்கிறது என்பதை மட்டுமே காட்டுகிறது. இது மூளையில் நீண்ட கால சிக்கல் எதாவது ஏற்படுத்துமா என்பதில் உறுதியான தகவல் இல்லை. ஆனால், ஒரு விஷயம் நன்கு தெளிவாகத் தெரிகிறது. அதாவது அன்றாட வாழ்வில் மன அழுத்தத்தைக் குறைப்பது, சமூக தொடர்புகளை அதிகரிப்பது, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொண்டால் அது மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாக இருக்கிறது.
எப்படித் தடுக்கலாம்
இத்துடன் போதுமான தூக்கம், சமச்சீரான உணவு, வேலைக்கு நடுவே சிறிய பிரேக் எடுப்பது ஆகியவையும் உடலுக்கு ரொம்பவே நல்லது. மேலும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டிஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
உடற்பயிற்சிக்கும் மன நலனுக்கும் கூட மிக பெரிய தொடர்பு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது சீராக உடற்பயிற்சி செய்வது நமது அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கும். அதேபோல புதிர்கள், வாசிப்பு மற்றும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் உங்கள் மூளைக்குப் பயிற்சி கொடுக்கலாம். இவை அனைத்துமே நாம் நிம்மதியான வாழ்க்கையை வாழவே உதவும்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications