டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாஸ்க் அணிவது கட்டாயம்.. எச்சில் துப்பினால் தண்டனை.. பல்வேறு புதிய விதிகளை அறிவித்த மத்திய அரசு!

வெளியே செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் கடும் தண்டனை அளிக்கப்படும் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: வெளியே செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் கடும் தண்டனை அளிக்கப்படும் என்று மத்திய அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

Recommended Video

    Lockdown extended by two weeks | நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

    கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இதனுடன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றுதான் மாஸ்க் அணிவது தொடர்பான அறிவிப்பு ஆகும். அதன்படி மக்கள் எல்லோரும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.

    சுனாமியின் போதே காத்தார்.. ராதாகிருஷ்ணனை களமிறக்கிய அரசு.. சென்னையில் கொரோனாவை தடுக்க திட்டம்!சுனாமியின் போதே காத்தார்.. ராதாகிருஷ்ணனை களமிறக்கிய அரசு.. சென்னையில் கொரோனாவை தடுக்க திட்டம்!

    மாஸ்க் அணிய வேண்டும்

    மாஸ்க் அணிய வேண்டும்

    அதேபோல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மாஸ்க் அணிவதை தங்கள் வளாகத்தில் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்பினால் கடும் தண்டனை அளிக்கப்படும். இதை மீறினால் அதற்கு உரிய அபராதம் மாநில அரசின் விதிகளின்படி விதிக்கப்படும். பொது இடங்களிலும், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து தனி மனித இடைவெளியையே கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    மது, புகைபிடிக்க வேண்டும்

    மது, புகைபிடிக்க வேண்டும்

    பொது இடங்களில் மது அருந்தவோ, புகை பிடிக்கவோ மற்ற புகையிலை பொருட்களை பயன்படுத்தவோ கூடாது. பொது இடங்களில் மக்கள் எங்கும் கூட்டமாக கூட கூடாது. அதே போல் அலுவலகங்களிலும் மக்கள் கூட்டமாக கூட கூடாது. ஐந்து பேருக்கும் அதிகமாக யாரும் எங்கும் கூட கூடாது. அலுவலகங்களில் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    33% பணியாளர்கள்

    33% பணியாளர்கள்

    அதேபோல் அலுவலகங்களில் 33% பணியாளர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் பணியாற்ற முடியும். இதை உறுதிப்படுத்தும் வகையில் சரியான ஷிப்ட் முறைகளை கடைபிடிக்க வேண்டும். அலுவலக நிர்வாகம் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். உணவு இடைவேளையில் கூட ஷிப்ட் முறைகளை கடைபிடிக்க வேண்டும். அலுவலகங்களில் தெர்மல் ஸ்கெனிங் முறைகளை கட்டாயமாக்க வேண்டும்.

    சானிடைச்சர்கள் கட்டாயம்

    சானிடைச்சர்கள் கட்டாயம்

    சானிடைச்சர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். பணியை தொடங்கும் முன் மொத்தமாக அலுவலகம் சுத்தம் செய்யப்பட வேண்டும். பெரும்பாலும் கூட்டங்களை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும். போதுமான போக்குவரத்து வசதிகளை அலுவலகம் செய்து கொடுக்க வேண்டும், என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    English summary
    Coronavirus: Mandatory mask, Spitting is an offense and many more rules say MHC.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X