சொதப்பல்.. கொரோனா சோதனையில் மாநிலங்கள் செய்யும் 4 பெரும் தவறுகள்.. அதிகாரிக்கும் கேஸ்களின் பின்னணி!
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்னும் நிறைய மாநிலங்களில் டெஸ்டிங் மிக குறைவான அளவில் மட்டும் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம் அடைய வாய்ப்புகள் உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் 305613 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 146726 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். மொத்தம் 150161 மொத்தம் இந்தியாவில் குணமடைந்து உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா காரணமாக 8711 பலியாகி உள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் மோசமாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 101141 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நான்கு தவறுகள்
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்னும் நிறைய மாநிலங்களில் டெஸ்டிங் மிக குறைவான அளவில் மட்டும் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம் அடைய வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவில் கொரோனா சோதனையில் நிறைய தவறுகள் செய்யப்படுகிறது. அதிலும் முக்கியமான நான்கு தவறுகள் காரணமாக கேஸ்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

சோதனை
இந்தியாவில் தற்போது வரை 50 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. உலகில் கொரோனா சோதனை அதிகமாக செய்த 4வது நாடாக இந்தியா இருக்கிறது. ஆனால் மக்கள் தொகையோடு தொடர்புபடுத்தி பார்த்தால் இந்தியா மிக மிக குறைவான அளவிலேயே கொரோனா சோதனைகளை செய்து இருக்கிறது. கடந்த மே 19ம் தேதியில் இருந்து தினமும் இந்தியாவில் டெஸ்ட் செய்யப்படும் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

தவறு 1
ஆனால் இன்னும் சில மாநிலங்களில் பெரிய அளவில் கொரோனா சோதனைகள் செய்யப்படுவது இல்லை. வேண்டும் என்றே கேஸ்கள் வர கூடாது என்பதால் சில மாநிலங்களில் கொரோனா சோதனைகள் செய்யப்படுவது இல்லை. உதாரணமாக குஜராத்தில் 22652 கேஸ்கள் உள்ளது. ஆனாலும் அங்கு கொரோனா சோதனைகள் மிக குறைவான செய்யப்படுகிறது. கொரோனா சோதனை செய்யப்படும் மாநிலங்களில் பட்டியலில் கடைசி நான்கு மாநிலங்களில் ஒன்றாக குஜராத் உள்ளது.

குஜராத் மோசம்
குஜராத் பீகார், உத்தர பிரதேசம்,மத்திய பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் மிக குறைவான கொரோனா சோதனைகளை செய்கிறது. குஜராத்தில் 10 லட்சம் பேருக்கு வெறும் 84 பேருக்கு மட்டுமே கொரோனா சோதனை செய்யப்படுகிறது. இதனால் அங்கு கேஸ்கள் குறைவாக வருவது போல தெரிகிறது. இந்தியாவில் 10க்கும் அதிகமாக மாநிலங்களில் 10 லட்சம் பேருக்கு 80க்கும் குறைவான நபர்களிடமே சோதனை செய்யப்படுகிறது.

அடுத்த தவறு என்ன
அடுத்ததாக டிபிஆர் எனப்படும் test positivity rate (TPR) அதிகம் உள்ள மாநிலங்கள் குறைவாக சோதனை செய்வது . அதாவது டிபிஆர் என்பது 100 பேருக்கு சோதனை செய்தால் அதில் எத்தனை பேருக்கு கொரோனா வருகிறது என்பதற்கான சதவிகிதம் ஆகும்.இதில் மகாராஷ்ட்ராவின் டிபிஆர் 15.28% ஆக உள்ளது. டெல்லியின் டிபிஆர் 11.99% ஆக உள்ளது. குஜராத்தின் டிபிஆர் 8% உள்ளது. தமிழகத்தின் டிபிஆர் 6.2% ஆக உள்ளது.

பீகார் நிலைமை
பீகாரின் டிபிஆர் 5.08% ஆக உள்ளது. ஆனாலும் டிபிஆர் சதவிகிதம் அதிகம் இருந்தும் கூட குஜராத், டெல்லி, பீகார் ஆகிய மாநிலங்கள் மிக குறைவான கொரோனா சோதனைகளை மட்டுமே செய்கிறது. தமிழகம் மட்டும் மகாராஷ்டிரா மட்டுமே தினமும் 14-15 ஆயிரம் சோதனைகளை செய்கிறது.மற்ற மாநிலங்கள் இந்த அளவிற்கு சோதனைகளை செய்வது கிடையாது .

மூன்றாவது தவறு
அடுத்தாக சில மாநிலங்கள் இன்னும் கொரோனா சோதனைகளை அதிகரிக்கவில்லை. தமிழகம் , மகாராஷ்டிராவை தவிர பீகார், மேற்கு வங்கம், டெல்லி, உத்தர பிரதேசம், குஜராத், பீகார், ஒடிசா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கொரோனா சோதனைகளை அதிகரிக்கவில்லை. இங்கெல்லாம் கேஸ்கள் குறைவாக உள்ளது போல இருக்கிறது. கொரோனா சோதனைகள் அதிகரிக்கப்பட்டால் இங்கெல்லாம் கேஸ்களும் அதிகரிக்கும்.

குறைக்க தொடங்கி உள்ளது
இதில் இன்னொரு தவறும் நடக்க தொடங்கி உள்ளது. அதன்படி சில மாநிலங்கள் மட்டும் கடந்த சில நாட்களாக கொரோனா சோதனைகளை குறைக்க தொடங்கி உள்ளது. உதாரணமாக 10 ஆயிரம் சோதனைகளை செய்து வந்த டெல்லி 9 ஆயிரம் சோதனைகள் செய்கிறது. 6 ஆயிரம் சோதனைகளை செய்து வந்த குஜராத் 4 ஆயிரம் சோதனைகளை செய்கிறது என்று கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா சோதனைகள் குறைக்கப்பட்டு வருகிறது.

அதிகம் வேண்டும்
இப்போதுதான் மாநிலங்கள் கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் பரவால்ல எவ்வளவு இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். அதன் மூலம் மட்டுமே கொரோனா மரணங்களை தடுக்க முடியும். ஆனால் பீகார், குஜராத் போன்ற மாநிலங்கள் கொரோனா சோதனைகளை இப்போது குறைக்க தொடங்கி இருப்பது பரவலை இன்னும் தீவிரப்படுத்தும்.












Click it and Unblock the Notifications