தொடர்ந்து வேகம் அதிகரிக்கிறது.. லாக்டவுனால் பயன் இல்லை.. இந்தியாவில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா!
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் 56351 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் கொரோனா காரணமாக 1889 பேர் பலியாகி உள்ளனர். 16776 பேர் மொத்தமாக நாடு முழுக்க குணமாகி உள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சரியாக 10 நாட்களில் இந்தியாவில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகியுள்ளது.இந்தியாவில் மொத்தம் 9 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
உத்தர பிரதேசம், தமிழ்நாடு , மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா, பீகார், பஞ்சாப் , ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிரா நிலை
அதன்படி மகாராஷ்டிராவில் தற்போது 17974 பேருக்கு கொரோனா உள்ளது. தினமும் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் அங்கு கொரோனா பரவி வருகிறது. அங்கு ஸ்டேஜ் 3 பரவல் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. நேற்று மட்டும் அங்கு 1216 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மும்பையில் பாதிப்பு 11394 ஆக உள்ளது. நேற்று மும்பையில் மட்டும் 690 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குஜராத் நிலை
குஜராத்தில் 7013 பேருக்கு கொரோனா உள்ளது. அங்கு 425 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் குஜராத்தில்தான் இறப்பு சதவிகிதம் மிகவும் அதிகமாக இருக்கிறது. அதேபோல் மேற்கு வங்கத்திலும் இறப்பு சதவிகிதம் அதிகம் உள்ளது. மேற்கு வங்கத்தில் 1548 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு கொரோனா காரணமாக 292 பேர் பலியாகி உள்ளனர்.

டெல்லி எப்படி
டெல்லியில் 5980 பேருக்கு கொரோனா உள்ளது. அங்கு 66 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்துக்கு அடுத்ததாக தமிழகம் உள்ளது . தமிழகத்தில் நேற்று 580 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. 5409 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உள்ளது. பலி எண்ணிக்கை 37 ஆக உள்ளது. ராஜஸ்தானில் 3427 பேருக்கு கொரோனா உள்ளது.

வேறு எங்கு
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 3252 பேருக்கு கொரோனா உள்ளது. உத்தர பிரதேசத்தில் 3071 பேருக்கு கொரோனா உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் 1833 பேருக்கு கொரோனா உள்ளது. இந்தியாவில் இனி வரும் நாட்களில் கொரோனா தீவிரம் அடையும் என்று கூறுகிறார்கள். ஜூன், ஜூலை மாதங்களில் தீவிரம் அடையும். கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications