இந்தியாவில்...4ல் ஒருவருக்கு...கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி...ஆய்வில் தகவல்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தனியார் நிறுவனம் மேற்கொண்டு இருக்கும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே புனே மற்றும் டெல்லியில் ஜீரோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்விலும் புனேயில் 50% பேருக்கும், மும்பை குடிசைப் பகுதியில் 57% பேருக்கும், டெல்லியில் 23% பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் TIFR, IISER என்ற தனியார் ஆராய்ச்சி நிறுவனம் சில மாநகராட்சிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. அதில், நாட்டில் நான்கில் ஒருவருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தனியார் நிறுவனம் இந்த மாதத்தில் இரண்டாவது வாரமும் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இன்னும் அதன் முடிவுகள் வெளியாகவில்லை.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

நாட்டில் நான்கில் ஒருவருக்கு கொரோனா வைரஸுக்கான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்றாலும், இவர்களுக்கு எந்தளவிற்கு இருக்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு இந்த எதிர்ப்பு சக்தி இருக்குமா அல்லது குறைந்த நாட்களுக்கு இருக்குமா போன்ற கேள்விகள் எழுகின்றன. அவ்வாறு நீண்ட நாட்களுக்கான எதிர்ப்பு சக்தியாக இருந்தால், இதை மந்தை நோய் எதிர்ப்பு சக்தியாக எடுத்துக் கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு பரிசோதனை

நோய் எதிர்ப்பு பரிசோதனை

நாட்டில் இதுவரைக்கும் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 60%-70% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டால்தான். மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கப்படும். இதை எட்டுவதற்கு இன்னும் இந்தியாவுக்கு அதிக நாட்கள் தேவைப்படும். இதை அடைந்தால் மட்டுமே, கொரோனா வைரஸ் தாக்கமும் குறைய வாய்ப்பு இருக்கிறது. டெல்லியில் கடந்த ஜூலை மாதம் நான்கில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய ஆய்வில் தெரிய வந்தது.

இந்தியர்களுக்கு எதிர்ப்பு சக்தி

இந்தியர்களுக்கு எதிர்ப்பு சக்தி

குறிப்பாக மக்கள் நெருக்கடி மிக்க இடங்களில் விரைவில் நோய் எதிர்ப்பு சக்தி மக்களுக்கு கிடைத்துள்ளது. தாராவியில் கடந்த இரண்டு மாதங்களாக பெரிய அளவில் தொற்று இல்லை. சிங்கிள் டிஜிட்டில் தொற்று காணப்படுகிறது. இதுவே அந்தப் பகுதியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக இருந்தது. இந்தியருக்கு பொதுவாகவே நோய் எதிர்ப்பபு சக்தி அதிகமாக இருப்பதால், எளிதில் மந்தை நோய் எதிர்ப்பு கிடைத்து இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

இந்தியாவில் பத்து லட்சம் பேருக்கு 39 கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் பத்து லட்சம் பேருக்கு 200 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இதுவே மேற்கத்திய நாடுகளில் அதிகமாக இருந்துள்ளது. இந்தியா அதிகளவில் இளைஞர்களை கொண்டு இருப்பதும் உயிரிழப்பு குறைவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

Recommended Video

    கொரோனா நோயாளிகளே! கடும் தலைவலியா.. உடனே இதை நுகருங்கள் - டாக்டர் தீபா
    அறிகுறி இல்லை

    அறிகுறி இல்லை

    இந்தியாவில் சராசரி வயது 29 என்று இருக்கும்போது, அமெரிக்காவில் 45 என்று இருக்கிறது. இதனால், உடலில் அதீத நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் டி செல் குறித்து இந்தியாவில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் அதிகமானவர்களுக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த தொற்றில் இருந்து மீண்டு வருவதும், உயிரிழப்பு விகிதமும் இந்தியாவில் குறைவாக இருக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+