கொரோனாவுக்கு உலக அளவில் 4,856,198 பேர் பலி.. இதுவரை பேர் 215,096,755 டிஸ்சார்ஜ்
உலக அளவில் தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48.56 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,856,198 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி பேரழிவை உருவாக்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகமே இந்த கொரோனாவால் முடங்கி போயுள்ளது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48.48 லட்சத்தை தாண்டியது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,856,198 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 237,964,660 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 215,096,755 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 18,011,707 கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா, இரண்டாவது இடத்திலும், பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 33 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள்படி, கொரோனா நோய்த்தொற்றில் அமெரிக்கா அடுத்தபடி உலகளவில் 2வது அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது.
அமெரிக்காவில் ஒரு நாளில் 102,003 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளன.. ஒரேநாளில் 1835 பேர் பலியாகி உள்ளனர்.. இதுவரை அங்கு 34,656,250 பேர் குணமாகி உள்ளனர்.. அமெரிக்காவில் இதுவரை 45,131,314 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 33,934,335 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.. நேற்று ஒரே நாளில் 19,870 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன... 450,408 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.. இதுவரை மட்டும் 33,240,703 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேஸில் உள்ளது.. 21,550,730 பேர் இதுவரை அங்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.. நேற்று ஒரே நாளில் 18,172 பேருக்கு தொற்று உறுதியாக உள்ளது.. 628 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்..
பிரேஸிலில் தொற்று எண்ணிக்கை 21,550,730 ஆக உயர்ந்துள்ளது.. அங்கு 600,493 பேர் இதுவரை அங்கு உயிரிழந்துள்ளனர்.. நேற்று மட்டும் 628 பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 7,717,356, பேர் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல நாடுகள் 2 டோஸ்களையும் போட்டுவிட்டு, 3வது டோஸ்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.. அந்த வகையில், இந்தியாவிலும் 2வது டோஸ்களை செலுத்தும் பணி தீவிரமாகி கொண்டிருக்கிறது.. ஆரம்பத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபோது, அதை செலுத்தி கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர்.. எனவே, அந்தந்த நாடுகள் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டன.. மேலும், தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான சிறப்பு பரிசுகளையும் சில நாடுகள் அறிவித்து வருகின்றன.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications