தீவிரமாய் பரவும் கொரோனா.. உலகளவில் இதுவரை 331,127,034 பேர் தொற்றுக்கு பாதிப்பு.. 5,563,105 பேர் பலி
உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் 331,127,034 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 268,955,488 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி பேரழிவை உருவாக்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகமே இந்த கொரோனாவால் முடங்கி போயுள்ளது.
ஆரம்பத்தில் முதன்முதலாக சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தகொரோனா தொற்றானது தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது... இன்னொரு பக்கம் ஒமிக்ரான் வைரஸ் கிளம்பி உள்ளது.

எண்ணிக்கை
உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55.63 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,563,105 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்... அதேபோல, உலகம் முழுவதும் கொரோனாவால் 331,127,034 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 268,955,488 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 56,608,441 கவலைக்கிடமான நிலையில் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரேசில்
அதில் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்திலும், பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 37 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள்படி, கொரோனா நோய்த்தொற்றில் அமெரிக்கா அடுத்தபடி உலகளவில் 2வது அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது.

உயிரிழப்பு
அமெரிக்காவில் ஒரு நாளில் 339,558 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.. ஒரேநாளில் 424 பேர் பலியாகி உள்ளனர்.. இதுவரை அங்கு 43,140,349 பேர் குணமாகி உள்ளனர்.. அமெரிக்காவில் இதுவரை 67,494,969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 37,602,832 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.. நேற்று ஒரே நாளில் 222,579 கோரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன... 486,784 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.. இதுவரை மட்டும் 35,378,872 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

இறப்பு
இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேஸில் உள்ளது.. 23,083,297 பேர் இதுவரை அங்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.. நேற்று ஒரே நாளில் 76,345 பேருக்கு தொற்று உறுதியாக உள்ளது.. 162 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.. பிரேஸிலில் தொற்று எண்ணிக்கை 23,083,297 ஆக உயர்ந்துள்ளது.. அங்கு 621,261 பேர் இதுவரை அங்கு உயிரிழந்துள்ளனர்.. நேற்று மட்டும் 162 பேர் இறந்துள்ளனர்.

சிகிச்சை
ரஷ்யாவில் இதுவரை 10,834,260 பேர் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,726 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு 670 பேர் உயிரிழந்துள்ளனர்.. அங்கு கொரோனா தொற்றில் இருந்து 98 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications