கொரோனா.. ராகுல் இத்தாலி சென்றார்.. முதலில் அவரைத்தான் சோதிக்க வேண்டும்.. பாஜக எம்பி பரபரப்பு!
காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்திக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று பாஜக டெல்லி எம்பி ரமேஷ் பித்தூரி தெரிவித்துள்ளார்.
டெல்லி: காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்திக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று பாஜக டெல்லி எம்பி ரமேஷ் பித்தூரி தெரிவித்துள்ளார்.
Recommended Video
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகில் மொத்தம் 60 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 3000 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுக்க உள்ள பலி எண்ணிக்கை ஆகும் இது. சீனாவில் மட்டும் 2900 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் உலகம் முழுக்க மொத்தம் 88000 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இப்போது என்ன
இத்தாலியில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சீனா, தென்கொரியாவிற்கு அடுத்தபடியாக இந்த வைரஸ் பரவும் மூன்றாவது பெரிய நாடாக இத்தாலி மாறி இருக்கிறது. 2500 பேருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. இதுவரை அங்கு 79 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன் அங்கு 35 பேர்தான் பலியாகி இருந்தனர். தற்போது இந்த வைரஸ் நினைத்ததை விட வேகமாக பரவி வருகிறது.

என்ன திணறல்
இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலர் இந்தியா வந்து இருக்கிறார்கள். இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 15 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் டெல்லியில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் மூலம் வேறு சிலருக்கும் இந்த வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இவர்கள் டெல்லியில் தொடர்பு கொண்ட எல்லா நபர்களும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

ராகுல் காந்தி
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இத்தாலிக்கு சென்று திரும்பினார். அங்கு அவர் சுமார் 10 நாட்கள் தங்கி இருந்தார். டெல்லியில் கலவரம் ஏற்பட்ட போது கூட அவர் இத்தாலியில்தான் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன் அவர் இந்தியா திரும்பினார். கொரோனா தொடர்பாக இவர் டிவிட் செய்து வருகிறார்.

என்ன சந்தேகம்
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று பாஜக டெல்லி எம்பி ரமேஷ் பித்தூரி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி சமீபத்தில்தான் இத்தாலிக்கு சென்று திரும்பினார். கண்டிப்பாக அவருக்கு கொரோனா தாக்குதல் இருக்க வாய்ப்புள்ளது. அவரைத்தான் முதலில் சோதனை செய்ய வேண்டும். உடனே அவரை தனிமைப்படுத்த வேண்டும் என்று பாஜக எம்பி குறிப்பிட்டுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications