அமித் ஷாவிற்கு புதிதாக கொரோனா டெஸ்ட் எடுக்கவில்லை.. உள்துறை விளக்கம்.. மனோஜ் திவாரி டிவிட் நீக்கம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு மீண்டும் கொரோனா சோதனை செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து அமித் ஷா குறித்து மனோஜ் திவாரி செய்திருந்த டிவிட் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்வீட் செய்து இருந்தார்.

Coronavirus test of Amit Shah has not been conducted so far says Ministry of Home Affairs

மிக லேசான அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இவருக்கு பெரிய அளவில் அறிகுறி இல்லாமல் கொரோனா ஏற்பட்டுள்ளது. தொற்று உறுதியானதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமித்ஷா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தை தொடங்கி வைத்தார் மோடி- 8.5 கோடி விவசாயிகளுக்கு ரூ17,000 கோடி நிதிநான் நலமுடன் இருக்கிறேன், மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளேன் என்று அமித் ஷா இந்தியில் டிவிட் செய்து இருந்தார். கடந்த ஒரு வாரமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டார் என்று பாஜக எம்.பி. மனோஜ் திவாரி டிவிட் செய்து இருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் குணமடைந்துள்ளார்.பரிசோதனையில் தற்போது தொற்று இல்லை, நெகட்டிவ் என்று வந்துள்ளது என்று பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்தார்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு மீண்டும் கொரோனா சோதனை செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளது. புதிதாக அமித் ஷாவிற்கு கொரோனா சோதனை செய்யவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.இதனால் அமித் ஷா இன்னும் கொரோனாவில் இருந்து விடுபட்டுவிட்டாரா என்று உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து அமித் ஷா குறித்து மனோஜ் திவாரி செய்திருந்த டிவிட் நீக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+