யார் வந்தாலும் சொல்லுங்கள்.. டெல்லியில் புதிய ஆணை.. கொரோனா பற்றி ஹு வெளியிட்ட அந்த அறிக்கை.. பீதி!

மிக சாதாரணமாக தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் மிக மோசமான வைரஸாக உருவெடுத்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மிக சாதாரணமாக தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் மிக மோசமான வைரஸாக உருவெடுத்துள்ளது. இந்த வைரஸ் தொடர்பாக ஹு வெளியிட்ட அறிக்கை பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Two New Coronavirus Cases Confirmed in india | மேலும் 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

    உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முதலில் மத்திய சீனா, ஹாங்காங் பகுதியில் இந்த வைரஸ் பரவி வந்தது. இந்த வைரஸ் கொரோனா வைரஸ் எனப்படும் வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது ஆகும்.

    இந்த குடும்பத்தில் மொத்தம் 6 வைரஸ் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, கொரோனா வைரஸ் குடும்பத்தின் 7 வது வைரஸ் ஆகும். சீனாவை தாக்கிய சார்ஸ் நோய் கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்டது.

    எல்லோருக்கும் மரணம்

    எல்லோருக்கும் மரணம்

    கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கினால் அவர்களுக்கு பல அடிப்படை பிரச்சனைகள் ஏற்படும். ஒருவரை பார்த்தால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்தானா என்று முதலில் சொல்ல முடியாது. இதனால் ஜலதோஷம், உடல் வலி, இருமல், தும்மல், காய்ச்சல், நெஞ்சுவலி கடைசியில் மரணம் வரை ஏற்பட வாய்ப்புள்ளது. லேசான காய்ச்சலில்தான் இது தொடங்கும். தற்போது தாக்கி வரும் கொரோனா வைரஸ் அப்படிப்பட்ட வைரஸ்தான்.

    எப்படி வைரஸ் வந்தது

    எப்படி வைரஸ் வந்தது

    கொரோனா வைரஸ் கொஞ்சம் வலிமையானது. மிகவும் எளிதாக மக்களை தாக்கும். அதிக சக்தி படைத்தது. இதன் மூலம் மோசமான பாதிப்புகள் உடனே ஏற்படலாம்.சீனாவின் வுஹன் பகுதியில்தான் இந்த கோரோனா வைரஸ் தோன்றியுள்ளது. சீனாவின் உஹன் பகுதியில்தான் முதலில் இது தாக்கப்பட்டது. அங்கு இருக்கும் மீன் மார்க்கெட்டில் இது உருவாகி இருக்கலாம்.ஆனால் இதுவும் கூட உறுதியாக சொல்லப்படவில்லை. அங்கிருந்து மக்களுக்கு பரவ வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை.

    எத்தனை நாடுகள்

    எத்தனை நாடுகள்

    முதலில் 22 நாடுகளில் இந்த வைரஸ் பரவியது. கடந்த மாதம் முதல் வாரம் வரை 22 நாடுகளில் மட்டுமே வைரஸ் இருந்தது. ஆனால் ஒரே வாரத்தில் வைரஸ் வேகம் எடுத்துள்ளது. சீனாவிற்கு வெளியே இந்த வைரஸ் வேகம் எடுத்து இருக்கிறது. தற்போது மொத்தம் 72 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது.மெக்சிகோவில் இந்த வைரஸ் பரவி உள்ளது. இத்தாலி, ஈரான், ஜப்பான், சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்பெயின், தாய்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பரவி உள்ளது.

    வேறு என்ன

    வேறு என்ன

    மேலும், தைவான், மலேசியா, சுவிட்சர்லாந்து., கனடா, வியட்நாம், நார்வே, ஆஸ்திரியா, இஸ்ரேல், லெபனான், நெதர்லாந்து, ஓமன், கிரீஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இன்னொரு பக்கம் டென்மார்க், ஜார்ஜியா, ரோமானியா, பின்லாந்து, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், அல்ஜீரிய, பிரேசில், ஈகுவாடர், ஐஸ்லாந்து, நியூசிலாந்து , நைஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கும் வைரஸ் பரவி உள்ளது.

    எப்படி வேகம்

    எப்படி வேகம்

    இந்த வைரஸ் இப்படி வேகமாக பரவி வருவதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது.உலகம் முழுக்க இன்னும் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்கிறார்கள்.தற்போது இந்தியாவில் இந்த வைரஸ் 2 பேருக்கு வைரஸ் பரவி உள்ளது. ஹைதராபாத்தில் ஒருவருக்கும் டெல்லியில் ஒருவருக்கும் இந்த வைரஸ் பரவி உள்ளது. ஹைதராபாத்தில் உள்ளவருக்கு ஹாங்காங்கில் இருந்து திரும்பிய பின் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

    மத்திய கிழக்கு நாடுகள்

    மத்திய கிழக்கு நாடுகள்

    அதேபோல் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மத்திய கிழக்கில் உள்ள 9 நாடுகளில் அனைத்து நாடுகளில் இந்த வைரஸ் தாக்கியுள்ளது. முக்கியமாக லெபனான், ஈரான், ஈராக், குவைத், பஹ்ரைன், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகளுக்கு ஈரானிடம் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    துபாய் சவுதி

    துபாய் சவுதி

    அதேபோல் துபாய் சவுதியில் கூட இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இன்னொரு பக்கம் கத்தாரில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் கத்தாரில் நிறைய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது கச்சா எண்ணெய் வேகமாக விலை குறைந்து வருகிறது. உலகம் முழுக்க விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல நாட்டு எல்லைகள் இதனால் மூடப்பட்டு இருக்கிறது .

    டெல்லி எப்படி

    டெல்லி எப்படி

    இத்தாலியில் இருந்து திரும்பிய பின் டெல்லியில் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் தற்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர மீட்டிங் நடத்தி வருகிறார். அதேபோல் டெல்லியில் ஹோட்டலில் தங்கும் வெளிநாட்டவர்களை கண்காணிக்க வேண்டும். வெளிநாட்டு மக்கள் அங்கு வந்து தங்கினால், அதை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

    அதிகம் பாதிப்பு

    அதிகம் பாதிப்பு

    இந்த வைரஸ் தாக்குதலில் ஈரான், ஈராக் , தென்கொரியா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளில் 8 நாடுகள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் வேகமாக பரவிய இந்த வைரஸ், சீனாவிற்கு வெளியே தென் கொரியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி உள்ளது. ஜப்பானில் உள்ள குட்டி தீவான க்யூஷூ தீவில் கூட இந்த வைரஸ் பரவி உள்ளது. அங்கு வெளி நபர்கள் கடந்த ஒரு மாதமாக செல்லவே இல்லை.

    உலக சுகாதார மையம்

    உலக சுகாதார மையம்

    இது தொடர்பாக உலக சுகாதார மையம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்று கூட தெரியவில்லை எங்களுக்கு. இது எங்களுக்கு புரியாத விஷயமாக உருவெடுத்துள்ளது என்று கூறியுள்ளது. கிட்டத்தட்ட உலக சுகாதார மையம் கை விரித்தது போல இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. உலகம் முழுக்க இது பெரிய பீதியை ஏற்படுத்தி உள்ளது. வைரஸ் தோன்றி மூன்று மாதம் ஆகியும் இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+