24 மணி நேரத்தில் 75022 பேருக்கு கொரோனா.. 43 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு.. இந்தியாவில் நிலைமை மோசம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 75022 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உலக அளவில் இந்தியாவில்தான் தினமும் அதிக கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் அதிகரித்து வருகிறது. பிரேசிலை முந்தி இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

தற்போது அமெரிக்காவை வேகமாக இந்தியா பின் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. விரைவில் அமெரிக்காவை விட அதிக கொரோனா கேஸ்கள் இந்தியாவில் பதிவாக வாய்ப்புள்ளது.

மொத்தம் எத்தனை

மொத்தம் எத்தனை

இந்தியாவில் மொத்தமாக 4277584 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 882751 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளனர். இந்தியாவில் இதுவரை 3321420 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 74123 பேர் குணமடைந்து உள்ளனர். இந்தியாவில் விரைவில் 43 லட்சம் கொரோனா கேஸ்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மரணம் எத்தனை

மரணம் எத்தனை

மொத்தமாக இதுவரை 72816 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1129 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இந்தியாவில் சராசரியாக 1100 பேர் தினமும் பலியாகிறார்கள்.மகாராஷ்டிராவில் அதிக பட்சமாக 923641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 27027 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 16429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசத்தில் 506493 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 4487 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 8368 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் 4 இடங்களில் 3 இடங்களை தென்னிந்திய மாநிலங்கள் பெற்றுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது.

தமிழகம்

தமிழகம்

தமிழகத்தில் 469256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 7928 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 51,212 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள. 410116 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 89 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர்.

கர்நாடகா எப்படி

கர்நாடகா எப்படி

கர்நாடகாவில் 404324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 5773 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 97,001 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். மொத்தமாக கர்நாடகாவில் இதுவரை 3,00,770 பேர் கர்நாடகாவில் குணமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+