விளக்கை அணைக்கச் சொன்ன மோடி.. ஞாயிற்றுக்கிழமைக்கு இப்போதே தயாராகும் மக்கள்.. இவ்வளவு வேகமா!?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏப்ரல் 5ம் தேதி மக்கள் இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்த அழைப்பு இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

Recommended Video

    Modi speech | Turn off your lights in home, Modi says

    இந்த பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி மக்கள் முன்னிலையில் பேசினார். கொரோனாவிற்கு எதிராக ஊரடங்கு சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

    அவர், இந்தியாவின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிக்கு நன்றி சொல்லவும், நம்முடைய கூட்டு ஆன்மாவை வலுப்படுத்தவும் கொரோனாவுக்கு எதிராக வரும் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு அனைத்து விளக்குகளையும் அணைத்து வைக்க வேண்டும். வரும் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை அனைத்து செல்போன், டார்ச்லைட்டில் வெளிச்சம் ஏற்படுத்துங்கள், என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

    மக்கள் தயார்

    மக்கள் தயார்

    பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இணையத்தில் பலரும் சீரியஸாகவும், கிண்டலாகவும் டிவிட் செய்து வருகிறார்கள். அரசு அதிகாரிகள் உடனே மெழுகுவர்த்திகள், தீ பெட்டிகள், சிறிய சிறிய ஒளி விளக்குகள், விளக்குகளில் பயன்படுத்தும் எண்ணெய்களை அத்தியாவசிய பொருட்களின் லிஸ்டில் கொண்டு வர வேண்டும்.எல்லா கடைகளிலும் இந்த பொருட்களை ஸ்டாக் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும், ரேஷன் கடைகளிலும் இது கிடைக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பலர் மிக சீரியஸாக டிவிட் செய்துள்ளனர்.

    தீபாவளி ரெடி

    இந்த நிலையில் இன்னொரு பக்கம் வடஇந்திய நெட்டிசன்கள் இப்போதே தீபாவளிக்கு தயார் ஆகிவிட்டார்கள். இதற்காக இப்போதே #Diwali டேக் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வட இந்தியாவில் தீபாவளி அன்று வீட்டில் இருக்கும் விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு, சிறிய சிறிய அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது வழக்கம். அதேபோல் செய்ய வடஇந்தியாவில் மக்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது மக்கள் இன்னொரு தீபாவளிக்கு தயார் ஆகி வருகிறார்கள்.

    அவர்களுக்கு நன்றி சொல்வோம்

    இந்தியா முழுக்க மருத்துவமனைகளில் மக்கள் கொரோனாவிற்கு எதிராக போராடுகிறார்கள். மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி வருகிறார்கள். பெண் நர்ஸ்கள் வீட்டிற்கு செல்லாமலே போராடி வருகிறார்கள். அவர்களுக்காக நாம் கண்டிப்பாக விளக்குகளை அனைத்து, நமது ஒற்றுமையை காட்ட வேண்டும் என்று பலர் இதற்கு சப்போர்ட் செய்ய தொடங்கி உள்ளனர்.

    மக்கள் கவனம்

    ஊரடங்கு காரணமாக மக்கள் சோர்ந்து போய் இருக்கிறார்கள். இதனால் பலர் வீடுகளில் பதற்றத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது போன்ற முடிவுகள் அமைதியை தரும். மக்கள் கவனத்தை இது திசை திருப்பும். பிரதமர் மோடியின் திட்டம் சரியானதுதான் என்று இவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

    சிலர் கிண்டல்

    மக்கள் டென்ஷனாக இருக்கும் இந்த கொரோனா காலத்தில் சிலர் இந்த ஐடியாவை வைத்து ஜாலியாக கலாய்க்கவும் தொடங்கி உள்ளனர்.. இவர், அவனவன் கொரானாவுக்கு மருந்து கண்டுப்பிடிக்கிறான். நாம போன வாரம் கை தட்டி கொரானாவுக்கு காது இல்லன்னு கண்டுப்பிடிச்சோம். இப்ப லைட் ஆப் பண்ணி கண்ணு இருக்கான்னு கண்டுப்பிடிக்க போறோம். வர வாரங்களில் கொரானாவுக்கு மூக்கும் வாயும் இருக்கான்னு கண்டுப்பிடிக்க போறோம்

    கொரோனாவை விரட்டுவோம் முஸ்தபா

    பலர் மிகவும் ஜாலியாக இந்த ஐடியாவை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதை ஜாலியாக நாம் கடைபிடிக்க வேண்டும். எல்லோரும் விளக்கை அணைக்க வேண்டும். உலகிற்கு இது உதாரணமாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள். இவர் முஸ்தஃபா முஸ்தஃபா.. கொரோனாவ வெரட்டுவோம் முஸ்தஃபா..என்றுள்ளார்.

    கலாய்க்க தொடங்கி உள்ளனர்

    ஆனால் எப்போதும் போல இந்த திட்டத்தை இணையத்தில் பலர் செமையாக கலாய்த்தும் வருகிறார்கள். இந்த திட்டங்களை எல்லாம் பார்த்து.. கொரோனா வைரஸ் சிரிச்சே செத்துரும்.. மாஸ்டர் ஸ்டிரோக்!என்று பலர் கூற தொடங்கி உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+