மக்களுக்கு இந்த அறிகுறி இருந்தா.. உடனே டெஸ்டுக்கு அனுப்புங்க.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
டெல்லி: மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் தலைவர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பால்ராம் பார்கவா சார்பாக அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகரிக்கும் கேஸ்கள் குறித்து இதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் திடீரென தினசரி கேஸ்கள் 16 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் இதுவரை 1270 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதுவரை 34,838,804 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிதாக 16,764 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிரா, டெல்லியில் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகம் பதிவாகி வருகிறது.

கடிதம்
இந்தியாவில் கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பால்ராம் பார்கவா மாநில அரசுகளுக்கு முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வருகிறது. பாசிட்டிவிட்டி ரேட் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் கேஸ்களில் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.

இந்தியா ஓமிக்ரான்
தொடக்கத்திலேயே கொரோனா நோயாளிகளை கண்டுபிடிப்பது கேஸ்கள் பரவுவதை குறையும். இதனால் மருத்துவமனை அட்மிஷனும் குறையும். ஒருகுறிப்பிட்ட அளவிற்கு கேஸ்கள் உயர்ந்தால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். அதேபோல் இதுபோன்ற நேரங்களில் ஆர்டிபிசிஆர் டெஸ்ட்களை மட்டும் நம்பி இருக்க கூடாது. ராபிட் ஆன்டிஜென் டெஸ்டுகளை அதிகரிக்க வேண்டும்,

இந்தியா கொரோனா
ஆர்டிபிசிஆர் டெஸ்ட் மூலம் முடிவுகள் வர 5-6 மணி நேரம் ஆகும். ஆனால் ஆன்டிஜென் டெஸ்ட் மூலம் உடனே முடிவுகள் வரும். இதில் பாசிட்டிவ் வரும் பட்சத்தில் மீண்டும் ஆர்டிபிசிஆர் செய்து உறுதி செய்ய முடியும். அதேபோல் வீட்டிலேயே ஆன்டிஜென் டெஸ்ட் செய்யும் கருவிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இதுபோன்ற 7 கருவிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. அதையும் வீட்டிலேயே பயன்படுத்தலாம்.

கொரோனா அறிகுறி
முடிந்த வரை வேகமாக டெஸ்ட் செய்ய வேண்டும். இதனால் நடமாடும் சோதனை கூடங்களை மாநில அரசுகள் அமைக்க வேண்டும். மாநில அரசுகள் மக்களின் கொரோனா அறிகுறிகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். காய்ச்சல் முகாம் வைத்து அறிகுறி உள்ளவர்களை சோதிக்க வேண்டும்.

ஓமிக்ரான் அறிகுறி ஓமிக்ரான் அறிகுறி
காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, மூச்சுத் திணறல், உடல் வலி, சுவை அல்லது வாசனை இழப்பு, சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு இந்த அறிகுறியில் எது இருந்தாலும் அவர்களை கொரோனா அறிகுறி உள்ள சந்தேக கேஸ்களாக பார்க்க வேண்டும். இவர்களை உடனே டெஸ்ட் செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் தலைவர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பால்ராம் பார்கவா சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications