ஹாட்ஸ்பாட்கள்தான் முக்கியம்.. கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்போம்.. பிரதமர் மோடியின் அதிரடி திட்டம்!
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் ஹாட்ஸ்பாட்களில் அதிக அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று மக்கள் முன்னிலையில் உரையாற்றிய போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதில், 21 நாள் ஊரடங்கு இன்று நிறைவடையும் நிலையில், அது மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவே இணைந்து இந்த வைரஸுக்கு எதிராக போராடி வருகிறது.
உங்களுடைய ஒத்துழைப்பு நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவியிருக்கிறது. உங்கள் தியாகங்களை நான் பெரிதும் மதிக்கிறேன். உங்களுடைய பிரச்சினைகளை நான் புரிந்து கொண்டிருக்கிறேன், என்றார்.

இந்தியா ஹாட்ஸ்பாட்
மேலும், இந்தியாவில் கொரோனா அனைத்து இடங்களிலும், அனைத்து வகையிலும் ஒழிக்கப்பட வேண்டும். ஒரே ஒரு நபர் இந்தியாவில் பலியானால் கூட அதை நாம் பெரிய விஷயமாக பார்க்க வேண்டும். அதை மிக கவனமாக பார்க்கக் வேண்டும். இதனால்தான் கொரோனா அதிகமாக பரவும் ஹாட்ஸ்பாட் பகுதிகளை அதிகம் கவனிக்க உத்தரவிட்டு உள்ளேன்.

கடுமையான கட்டுப்பாடு
ஹாஸ்பாட் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.அங்குதான் கொரோனா தீவிரமாக பார்வை வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் புதிதாக ஹாட்ஸ்பாட் பகுதிகள் உருவாகும். இதை தடுப்பதுதான் எங்கள் நோக்கம். ஹாஸ்பாட் பகுதிகள் உருவாகாமல் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் ஆகவும். ஆனால் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும்
அங்கு கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும். கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். புதிதாக எங்காவது ஹாஸ்பாட் பகுதிகள் தோன்றினால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். ஏப்ரல் 20 வரை இது கண்காணிக்கப்படும். அனைத்து மாவட்டங்கள், வட்டங்கள், மாநிலங்கள் எல்லாம் தீவிரமாக கண்காணிக்கப்படும். அங்கு எப்படி விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று கண்காணிக்கப்படும்.

தீவிரம் அடைய கூடாது
இந்த இடங்களில் கொரோனா தீவிரம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி நடந்தால் அங்கு விதிகள் தளர்த்தப்படும். ஊரடங்கு கொஞ்சம் தளர்த்தப்படும். ஆனால் அதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஆனால் எப்போதும் போல ஹாட்ஸ்பாட்களில் தீவிரமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இந்த அரசு ஹாஸ்பாட் பகுதிகள் மீது தீவிர கவனம் செலுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications