மனித குலத்தின் எதிரிகள்.. விட மாட்டோம்.. டெல்லி மாநாடு சென்றவர்கள் மீது ஆதித்யநாத் கடும் பாய்ச்சல்!

டெல்லியில் மத மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உத்தர பிரதேசத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் மீது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக பாய்ந்து உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் மத மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உத்தர பிரதேசத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் மீது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக பாய்ந்து உள்ளார்.

Recommended Video

    டெல்லியில் நடைபெற்ற கூட்டம்... பலருக்கு கொரோனா பாதிப்பு... என்ன நடந்தது?

    டெல்லி மேற்கு நிஜாமுதீன் பகுதியில் நடந்த மத ரீதியான கூட்டம் காரணமாக இந்தியாவில் பலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு உள்ள ஒரு வழிபாட்டு தலத்தில்தான் இந்த கூட்டம் நடந்தது. மார்ச் 8 முதல் மார்ச் 15ம் தேதி இரவு வரை இந்த கூட்டம் நடந்தது.

    இதில் 1500 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் இதில் கலந்து கொண்டவர்களில் 244 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த மாநாட்டில் கலந்த கொண்டவர்களில் இந்தியா முழுக்க 352 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தியா முழுக்க எத்தனை பேர்

    இந்தியா முழுக்க எத்தனை பேர்

    இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக சில மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இதில் கலந்து கொண்ட வெளிநாட்டினர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டீஷ், தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 960 வெளிநாட்டினரின் விசாக்களை நிரந்தரமாக மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

    காசியாபாத் எம்எம்ஜி மருத்துவமனை

    காசியாபாத் எம்எம்ஜி மருத்துவமனை

    இவர்கள் விசா விதிமுறைகளை மீறிவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. இவர்கள் மீது இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முயன்று வருகிறது. இந்த அமைப்பு மீது வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் இருந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தற்போது கொரோனா காரணமாக காசியாபாத் எம்எம்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மீது அம்மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது.

    ஆதித்யநாத் பேட்டி

    ஆதித்யநாத் பேட்டி

    இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தொடர்பாக முதல்வர் ஆதித்யநாத் அளித்துள்ள பேட்டியில், அவர்கள் யாரும் சட்டத்தை மதிக்கவில்லை. அவர்கள் எங்கள் உத்தரவை பின்பற்றவில்லை. அவர்கள் மனித குலத்தின் எதிரிகள். அவர்கள் மீது நாங்கள் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தை போட உத்தரவிட்டு இருக்கிறோம். அவர்கள் யாரையும் நாங்கள் விட மாட்டோம். அந்த கூட்டத்திற்கு சென்ற எல்லோரையும் தேடி வருகிறோம்.

    என்எஸ்ஏ பாய்ந்தது

    என்எஸ்ஏ பாய்ந்தது

    அதேபோல் அவர்கள் மருத்துவமனையில் பெண் மருத்துவர்களிடம் மோசமாக நடந்து இருக்கிறார்கள். இதை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது . எங்கள் மாநிலத்தில் இதற்கு முன் இப்படி நடந்தது இல்லை. இனியும் இப்படி நடக்க விட மாட்டோம். நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு இவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க போகிறோம், என்று முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+