Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுற்றிலும் பயணிகள்.. அலட்டிக்காமல் லிப் லாக்கில் இளம் ஜோடி.. பரவும் வீடியோ.. மெட்ரோ ரயிலில் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஓடும் மெட்ரோ ரயிலில் பயணிகள் சிலர் சமீபகாலமாக அநாகரிகமாக நடந்து கொள்வது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. பிகினி உடையில் அண்மையில் ஒரு பயணி இணையத்தில் விவாதத்தை கிளப்பி விட்டு இருந்த நிலையில், தற்போது ஒரு ஜோடி லிப் லாக் கிஸ் செய்யும் வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன.

தலைநகர் டெல்லியில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் மெட்ரோ ரயிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர். அதிலும் பீக் நேரங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதும்.

Couple is seen kissing passionately in Delhi Metro Rail, Video is trending furiously on Twitter

இந்த நிலையில், அண்மைக் காலமாகவே டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் சிலர் நடந்து கொள்ளும் முறை பேசுபொருள் ஆகியுள்ளது. மெட்ரோ ரயிலில் இவ்வாறான செயல்கள் வீடியோ இணையத்தில் தொடர்ச்சியாக விவாதத்தைக் கிளப்பி வருகிறது. பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு பயணிகளும் பயணம் செய்யும் டெல்லி மெட்ரோவில் பயணிகள் கண்ணியக்குறைவாக நடந்து கொள்ளக்கூடாது என்று மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தல் விடுத்தாலும் பயணிகள் சிலர் திருந்தியபாடில்லை.

குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் பிகினி உடையில் வலம் வந்தது பெரும் விவாதத்தை இணையத்தில் கிளப்பி விட்டு இருந்தது. பொதுப்போக்குவரத்து அமைப்பான மெட்ரோவில் இளம்பெண் பிகினி உடையில் வருவது ஏற்கத்தக்கது இல்லை என சிலர் கடுமையாக சாடியிருந்தனர். இந்த விவகாரம் பேசு பொருளான நிலையில், இளைஞர் ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபட்டது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இப்படி சில பயணிகளின் ஒழுக்கக்கேடான செயலால் கடந்த சில நாட்களாகவே டெல்லி மெட்ரோ செய்திகளில் அடிபட்டு வரும் நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் மெட்ரோ ரயிலில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்த ஜோடி, சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் லிப் லாக் கிஸ் செய்கின்றனர். இத்தனைக்கும் அவர்களை சுற்றியும் பயணிகள் இருக்கிறார்கள்.

இதையெல்லம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாத இந்த ஜோடி, மெய்மறந்து முத்தம் இட்டுக்கொண்டே இருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி நெட்டிசன்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சிலரோ இளைஞர் சிபிஆர் சிகிச்சை செய்வதாகவும் பதிவிட்டு வருகின்றனர். மெட்ரோ ரயிலில் இந்த ஜோடி முத்தம் இட்டும் கொள்ளும் வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.

சக பயணி ஒருவர் இந்த வீடியோவை எடுத்து இருப்பதாக தெரிகிறது. நெட்டிசன்கள் பலரும் இதுபோன்ற முகம் சுளிக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபடும் பயணிகளுக்கு எதிராக டெல்லி மெட்ரோ நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்கள். நெட்டிசன் ஓருவர் கூறுகையில், இதுதான் உண்மையான காதலா.. வெட்கமே இல்லையா? என ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.

இன்னும் சில நெட்டிசன்களோ பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பயணிக்கும் பொது போக்குவரத்தில் இப்படி காதல் ஜோடிகள் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் அண்மையில், பிகினி உடையில் பெண் பயணித்த வீடியோவையும் பதிவிட்டு விவாதத்தை மேலும் சூடாக்கி வருகின்றனர். டெல்லி மெட்ரோ நிர்வாகம் தான் இது போன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது பயணிகளின் பொதுவான கருத்தாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+