டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செப்டம்பர் முதல் கோவேக்சின் தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செப்டம்பர் முதல் கோவேக்சின் தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகள் முதலில் மருத்துவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டது. 2-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

கொரோனா தடுப்பூசி 'சாதனை' சட்டென மறுநாளே சரிந்தது ஏன்? பாஜக ஆளும் 7 மாநிலங்களின் மீது சந்தேகம்? கொரோனா தடுப்பூசி 'சாதனை' சட்டென மறுநாளே சரிந்தது ஏன்? பாஜக ஆளும் 7 மாநிலங்களின் மீது சந்தேகம்?

முழு வீச்சில் தடுப்பூசிகள்

முழு வீச்சில் தடுப்பூசிகள்

இதனையடுத்து 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. திங்கள்கிழமையன்று ஒரே நாளில் 88 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

 டெல்டா பிளஸ் கொரோனா

டெல்டா பிளஸ் கொரோனா

இந்த நிலையில் கொரோனா 3-வது அலையின் தொடக்கமாக இருக்குமோ என அஞ்சும் வகையில் டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு தொடங்கி இருக்கிறது. இது தொடர்பாக மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இம்மாநிலங்களில்தான் டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு தற்போது உள்ளது.

2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு...

2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு...

இந்த நிலையில் இந்தியா டுடே டிவிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரிய அளித்த பேட்டியில், 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான கோவேக்சின் தடுப்பூசி சோதனையின் 2-ம் கட்ட முடிவுகள் செப்டம்பரில் வந்துவிடும். அதே மாதத்தில் இந்த கோவேக்சின் பயன்பாட்டுக்கான ஒப்புதலும் கிடைத்துவிடும் என்றார்.

பைசர் தடுப்பூசிகள்

பைசர் தடுப்பூசிகள்

மேலும் இந்தியாவில் பைசர் தடுப்பூசிகளுக்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும்; இந்த தடுப்பூசிகளும் கூட குழந்தைகளுக்கு போடக் கூடியதாகவும் இருக்கும் என்றார் ரந்தீப் குலேரியா.

English summary
AIIMS Director Dr. Randeep Guleria, said that we can expect a vaccine for children by September.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X