அதிகரிக்கும் ஓமிக்ரான்: இந்தியாவில் கொரோனா பரவல் எப்படி இருக்கிறது? நேற்று எத்தனை பேருக்கு பாதிப்பு?
டெல்லி: இந்தியாவில் இதுவரை 34,682,736 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் நேற்றை விட 6 சதவிகிதம் குறைவாக உள்ளது.
இந்தியாவில் புதிதாக 7,992 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 475,128 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 393 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 34,105,066 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 93,277 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
இந்தியாவில் தற்போது இருக்கும் ஆக்டிவ் கேஸ்கள் கடந்த 559 மாதங்களில் பதிவான மிக குறைவான கேஸ்கள் ஆகும்.கடந்த மார்ச் 2020க்கு பின் இந்தியாவில் இருக்கும் மிக குறைவான ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை ஆகும் இது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து மக்கள் குணமடையும் வீதம் 98.36 சதவிகிதமாக உள்ளது.

பாசிட்டிவ் கேஸ்கள்
இந்தியாவில் தினசரி பாசிட்டிவ் சதவிகிதம் 0.64 சதவிகிதமாக உள்ளது. கடந்த 68 நாட்களில் இது மிக குறைவான சதவிகிதம் ஆகும்.இந்தியாவில் இன்னொரு பக்கம் ஓமிக்ரான் கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. அதன்படி இந்தியாவில் இதுவரை 33 பேருக்கு ஓமிக்ரான் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியவர்களுக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

ஓமிக்ரான்
அதன்படி டெல்லியில் புதிதாக ஒருவருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இவர் ஜிம்பாபேவில் இருந்து டெல்லிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டெல்லியில் ஓமிக்ரான் பாதிப்பு இரண்டாக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்புகள் 1000க்கும் கீழ் சென்றுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 66,42,372 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 695 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 10,213 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,41,223 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,90,936 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 12 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3752 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா காரணமாக 51,87,033 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 39,998 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 42,579 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 340 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 51,04,456 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 700க்கும் கீழ் சென்றுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 27,34,034 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 688 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 36, பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மொத்தமாக 26,89,627 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 7,821 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேர்தத்தில் தமிழ்நாட்டில் 11 பேர் பலியாகி உள்ளனர்.
-
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications