உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து 1.45 கோடி பேர் மீண்டனர் - 7.72 லட்சம் பேர் மரணம்

உலக அளவில்கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 1.45 கோடியைத் தாண்டியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.18 கோடியைத் தாண்டியுள்ளது.கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.72 லட்சமாக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டு நோயுடன் எதிர்த்து போராடி குணமடைந்தோர் எண்ணிக்கை 1.45 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 64 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Covid-19 coronavirus: world recovery live update

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கால் பதித்தது. தற்போது சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டாலும் கூட பிற நாடுகளில் பரவல் தொடர்கதையாய் நீண்டு கொண்டிருக்கிறது.

தினசரியும் 4 நாடுகளில் தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. குறிப்பாக 3 நாடுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பதிவாகி வருகிறது.

அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் இரண்டாம் இடத்திலும் அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் உள்ளது. கொலம்பியாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு பதிவாகி வருகிறது.

30க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.18 கோடியைத் தாண்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+