இந்தியாவில் கொரோனா மீண்டும் தீவிரம் ஒரே நாளில் 3,62,727 பேர் பாதிப்பு - 4,120 பேர் மரணம்
நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 3,62,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 4120 பேர் மரணமடைந்துள்ளனர்.
டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 3,62,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,37,03,665 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 3,52,181 பேர் குணமடைந்துள்ளனர். 4,120 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. கொத்து கொத்தாக பரவி வரும் கொரோனாவால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
கொரோனா தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேல் பதிவானது. 4ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர பிற கடைகள் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

2,37,03,665 பேர் கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த 24 மணிநேரத்தில் 3,62,727 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,37,03,665 பேராக அதிகரித்துள்ளது.

1,97,34,823 டிஸ்சார்ஜ்
கொரோனாவில் இருந்து 3,52,181 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து 1,97,34,823 பேர் குணமடைந்துள்ளனர். 37,10,525 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2,58,317 பேர் கொரோனாவிற்கு பலி
கடந்த 24 மணி நேரத்தில் 4,120 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,58,317 பேராக அதிகரித்துள்ளது.

17,72,14,256 தடுப்பூசி
கொரோனாவைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மே 10ஆம் தேதி வரை 17,72,14,256 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

8 வாரங்களுக்கு லாக்டவுன்
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 6 முதல் 8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை என ஐ.சி.எம்.ஆர். தலைவர் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு 10சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அவசியம் என ஐ.சி.எம்.ஆர்.தலைவர் கூறியுள்ளார். இந்தியாவில் 700-க்கும் அதிகமான மாவட்டங்கள் உள்ள நிலையில் 533 மாவட்டங்களில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமான பாதிப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களில் மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications