கொரோனா இரண்டாம் அலை: இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் வேலையிழப்பு
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் கடந்த 2020 ஆம் ஆண்டில் பரவலான பேரழிவிற்கு வழிவகுத்தது. லாக் டவுன் காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருந்ததால் வேலையின்ம
டெல்லி: கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளதால் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இரவு நேர லாக்டவுன், வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் தற்போது அமல்படுத்தப்படுகறது. கொரோனா அச்சம் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால் வேலையின்மை விகிதம் இப்போது 10 சதவிகித்தை எட்டும் நகர்ப்புறங்களில் இதன் தாக்கம் மிகவும் கடுமையானதாகத் தெரிவதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கிப்போனது. புலம் பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த ஊர் திரும்பினர்.

கொரோனா கால வேலையிழப்பு பற்றி இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற அமைப்பின் சிந்தனை குழு பல ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், லாக்டவுன் அமல்படுத்தப்பட்டப்பிறகு, இந்தியாவில் 12 கோடியே 20 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்து இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
லாக்டவுன் காலத்தில் தினக்கூலி வாங்கும் தொழிலாளர்களும், சிறு தொழில், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் இந்த ஊரடங்கு நேரத்தில் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கின. சொந்த ஊர் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை செய்து வந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கினர்.
இந்திய பொருளாதாரம் மெல்ல மீண்டு வரும் சூழ்நிலையில் கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இதனால் பல நகரங்களில் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. புலம் பெயர் தொழிலாளர்கள் அச்சத்துடன் மீண்டும் சொந்த ஊர் திரும்ப ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற அமைப்பின் சிந்தனை குழு தற்போது நடத்திய ஆய்வில்
நாட்டில் வேலையின்மை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வேலையின்மை விகிதம் 8.6 சதவிகிதத்தை எட்டியுள்ளது, இது இரண்டு வாரங்களுக்கு முன்பு வெறும் 6.7 சதவிகிதமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதால் வேலையின்மை விகிதம் இப்போது 10 சதவிகித்தை எட்டும் நகர்ப்புறங்களில் இதன் தாக்கம் மிகவும் கடுமையானதாகத் தெரிவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தினசரி பாதிப்பு ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிராவில் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதித்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. விரையில் முழு நேர லாக்டவுன் அமல்படுத்துவதற்காக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிகரித்து வரும் கொரோனா நாட்டின் தொழில் வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும் இதன்மூலம் வேலையிழப்பு சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் பொருளாதார மீட்சியை தாமதப்படுத்தும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் பலருக்கும் வேலையிழப்பை ஏற்படுத்தியது. சம்பள உயர்வு பாதிப்பு ஏற்பட்டது. சுற்றுலா, ஹோட்டல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முடங்கிப்போனது. இந்த ஆண்டும் முழுநேர லாக்டவுன் அமல்படுத்துவதை விட கடுமையான கோவிட் 19 கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications